பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 300


-பொழுது அங்கு இருந்த மேஜர் இராபர்ட் டர்னிங் (Major Robert Turning), தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஜியார்ஜ் ஹக்சு (George Hughes) இருவரையும் அந்தச் சூழலில் எனக்கு உதவியளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

இந்தக் காகிதங்களிலிருந்து தாங்கள், கலகக்காரக் கட்டபொம்ம நாயக்கன் பணிந்தான் அல்லது கிஸ்தியைக் கட்டாமலிருந்ததை மறுக்கவில்லை என்பதை அறிவீர்கள். ஆயுதமணிந்த படைவீரரைத் தன்னுடன் அனுமதித்தாலொழிய கலெக்டர் லூஷிங்டன் கட்டளைப்படி அவரைப் பார்க்க மறுத்துவிட்டான். (அடி! ஆத்தே! புலி பூனையாகுமா? கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? - ந.ச.) செப்டம்பர் 4 ஆம் தேதி அரசிடமிருந்து அவனைப் பற்றி வந்த ஆணைகளை விளக்குவதற்காக என்னைப் பார்க்கும்படி கட்டளையிட்டேன். ஆனால் அவன் தான் நலமாக இல்லை என்று சாக்குச் சொல்லிக் கீழ்ப்படிய மறுத்துவிட்டான். மேலே குறிப்பிட்ட காகிதங்களிலிருந்து, அவன் தானே வருந்தி ஒப்புக் கொண்ட தன்றி, அவனது சாட்சிகள் கீழ்க்காண்பனவற்றைத் தெளிவாக நிலை நாட்டியது தெரிகிறது. கம்பெனி அதிகாரத்திடம் கோபம் கொண்ட கட்டபொம்ம நாயக்கன் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அவனை வெளிப்படையாய் எதிர்த்த அந்தப் பாளையக்காரனுக்கு எதிராகச் சிவகிரி பாளையக்காரனுடைய மகன் மாப்பிள்ளை வன்னியன் இருவருடனும் சேர்ந்து கொள்வதற்காக அவனுடைய உறவினர்களில் ஒருவனுடைய தலைமையின் கீழ் 700 முதல் 1000 வரை ஆயுதம் தாங்கிய வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான். கடந்த செப்டம்பர் திங்கள் 5 ஆம் தேதி அவன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையிலிருந்த போது அங்கிருந்து சிறிது தூரத்தில் என்னை வந்து பார்க்கும்படி அனுப்பிய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டான். ஆனால் அவன் அன்று அவனுடைய கோட்டையில்தான் இருந்தான். அரச ஆணைக்குக் கீழ்ப்படியும்படி கட்டாயப்படுத்தும்படி ஏவப்பட்ட கம்பெனி துருப்புகளில் பலரைச் சுட்டுக் கொலை செய்தான். (பின்னே! - ந.ச.) ‘ஏ’ காகிதங்களில் விவரமாய்க் குறிப்பிட்டபடி நடந்த பின்னர் கம்பெனி அதிகாரி களைக் காயப்படுத்தியதற்காக அவன் சாத்தண்டனை அடைய வேண்டுமென்று அரசாங்கம் மிக அஞ்சத்தக்க தீர்மானம் செய்திருப்பதைக் கட்டபொம்மனுக்கு அறிவிப்பதற்காக நான் அந்தப் பாளையக்காரனிடம் சென்றேன். அதன் பிறகு அவன் தண்டனையை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்பட்டான். கயத்தாறிலுள்ள பழைய கோட்டைக்கு அருகே உள்ள திறந்த வெளித் திடலில் தூக்கிலிடப்பட்டான்.

கட்டபொம்ம நாயக்கனைத் தூக்குமேடைக்கு அழைத்துச் சென்-