பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

299 கால்டுவெல்


அவர்கள் உத்தரவிட வேண்டுமெனவும் வாஷிங்டனை வேண்டியிருந்தான். (இதை விடவா தொண்டைமானின் துரோகத்திற்குச் சான்று தேவை? - ந.ச.) அரசாங்கத்திடமிருந்து எவ்விதக் கட்டளையும் வரவில்லையாயின், என் வேண்டுகோளின்படி கட்டபொம்மனைக் கைதாக்கி மதுரைக்கு அனுப்பி அங்குள்ள அதிகாரியிடம் ஒப்படைத்து விடும் படி வாஷிங்டன் தொண்டைமானுக்குத் தெரிவித்திருந்தான். மாறாக, அரசிடமிருந்து எந்தவித கட்டளையும் வராமலிருந்தால், கலகக்காரப் பாளையக்காரர்களும் அவர்களுடைய ஆட்களும் அரசாங்க அதிகாரத்துக்கு எதிராக ஆயுதமணிந்தவர்களாய்க் கலகங்களில் கலந்து கொண்டால் அவர்களுக்கு வெளிப்படையாக இராணுவ தண்டனை அளிக்க எனக்கு ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி, கட்டபொம்ம நாயக்கன் மதுரையிலிருந்து பாசறைக்கு வரும் போது என்னுடைய முதல் கட்டளைக்கு ஏற்ப எவ்வித உடன்பாடற்ற தொல்லைகளும் தராமல் அழைத்து வருவதற்காக இந்தப் படையிலிருந்து ஒரு பகுதியை நான் அனுப்புவேன்.

5 ஆம் தேதி காலை கலகக்காரக் கட்டபொம்ம பாளையக்காரனை வரவேற்று அழைத்து வரும்படி நான் மதுரைக்கு அனுப்பிய படை கைதியுடன் (சுதேசி மன்னன் பரதேசிக்குக் கைதி! ஏன் வ.உ.சி.க்கும், பாரதிக்கும், ம.பொ.சி.க்கும் கண்கள் சிவக்காது? - ந.ச.) வந்து சேர்ந்தது. அவர்களுடன் ஊமைத் தம்பி குமாரசுவாமி நாயக்கன் உள்பட ஆறு நெருங்கிய உறவினர்கள் கைதாக்கிக் கொண்டுவரப்பட்டனர். கட்டபொம்ம நாயக்கனைப் பற்றிய அரசு கட்டளைகளை வெளிப்படையாகவும், சூழ்நிலைக் கேற்றவாறு மிகக் கண்ணியத்துடனும் பெருமிதத்துடனும் செய்து முடிக்கும் வகைகளைப் பற்றிச் சிந்திக்க, வந்து பார்க்கும்படி கூறினேன். அவர்கள் ஒன்று கூடியவுடன் கீழ்ப்படியாத கட்டபொம்ம நாயக்கனுக்கு அவனுடைய பல தீய செயல்களுக்காக அளிக்கப்பட்டிருக்கும் அச்சமூட்டும் தண்டனைகளைப் படிக்கும்போது மற்ற பாளையக்காரர் களும் அங்கு வந்து கூடியிருக்கும்படி கேட்டுக் கொண்டேன். இக் கொடுமைகளுக்கெல்லாம் மேலாக, என் கட்டளையின்படி அவனை அடக்கி அவனது கடமையை உணர்த்துவதற்காக அனுப்பப்பட்ட கம்பெனிப் பட்டாளத்தைத் துணிவாக எதிர்த்துக் கலகம் செய்ததையும் அவர்கள் அறிவார்கள்.

பிறகு, கட்டபொம்ம நாயக்கனை அக்கூட்டத்திற்கு அழைத்து வரும்படிப் பணித்தேன். அவனை விசாரித்து அவன் குற்றத்திற்காக மன்னிப்பு கேட்கும்படிச் செய்தேன். அவற்றை விவரமாக ‘ஏ’ என்று குறிப்பிட்ட காகிதத்தில் எழுதி நான் கையெழுத்திட்டுள்ளேன். அப்-