பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 320


கூட்டங்களால் உடனே தாக்கப்பட்டனர். அக்கரையிலுள்ள அவர்கள் தோழர்களிடம் எதிரிகளிடையே நுழைந்து நீந்திச்சென்றனர். எல்லாப்படை வீரர்களும் சிறந்த முறையில் போர் செய்தனர். சிறப்பாக எறிகுண்டு வீசுபவர்கள் எதிரியின் பெரிய படை ஒன்றை எதிர்த்து அவர்களை ஓடும்படி செய்தார்கள். பாளையக்காரர்கள் அந்த இடத்தைக் கைப்பற்ற எண்ணி அதன் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் முற்றுகை இட்டனர். கோயிலில் நடப்பதை அறிந்து கொள்ள இயலாதபடி மறைக்கப் பெரிய மண் வரப்புகளை எழுப்பினர். மேலும் அவர்கள் அரனைக் கடக்க மதிலேறுவதற்குப் பயன்படத்தக்க ஏணிகளை விரைவாகத் தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்பொது எங்கள் படை அவர்களைத் தாக்கியது. அதனால் கோட்டைக் காவல்படை பின்வாங்கியது. நாங்கள் பாளையங்கோட்டைக்குத் திரும்பி வரும்போது எதிரிகள் எங்கள் வீரர் களால் அடிக்கடி சுடப்பட்டாலும் வழிநெடுகிலும் எங்களுக்குத் தொல்லைகள் தந்து கொண்டிருந்தனர். நாங்கள் எதிர்பார்த்த அளவு எங்கட்கு அதிக இழப்பு இல்லை. மறுபடி முற்றுகைக்குத் தேவையான வற்றைச் சேர்க்கும் படைகள் பாளையங்கோட்டையில் தங்கின.

நாட்டின்நிலை இவ்வாறு குழப்பத்திலிருக்கும்போது, அக்காலத்திய உள்நாட்டுக் கிறித்தவர்கள் எண்ணிக்கையில் குறைவாயிருந்த போதிலும் அவர்களுடைய கிறித்தவ ஆட்சியாளர்களின் கொடுமை களையும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. 1802 ஆம் ஆண்டிற்கான கிறித்தவ அறிவுக் குழுவின் (Christian Knowledge Society) அறிக்கையிலிருந்து இதை நாம் அறிகிறோம்.

பிரிட்டிஷ் அரசாட்சியை எதிர்ப்பதனால் உள்நாட்டுக் கிறித்தவர் களையும் ஆங்கிலேயருடன் சேர்த்து எண்ணும் குழப்பம் நிறைந்த பாளையக்காரர்களால் தெற்கிலுள்ள மதக் குழுக்கள் மிகுந்த துன்பத்தை அடைந்தன. கம்பெனியின் எல்லைகட்குள் கொள்ளையிட்டபோது, அவர்கள் கிறித்தவர்களைச் சூறையாடினர்; சிறைப் பிடித்தனர்; துன்புறுத்தினர். அவர்களது கோயில்கள் சிலவற்றை அழித்தனர். அவற்றிலிருந்த புத்தகங்களை எரித்தனர். இந்தத் துன்பங்கள் குறைவதற்கான வழியில்லை எனத் தோன்றியவுடன் மக்கள் அவர்களது வீடுகளை விட்டு ஓடிக் காடுகளில் அடைக்கலம் புகுந்தனர்.

பொதுவாகப் பாளையக்காரர்களைப் பற்றியும் குறிப்பாக பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனைப் பற்றியும் சிறு குறிப்புகளை ஜெனரல் வெல்ஷ் தருகிறார். அவர் இவ்வாறு செய்யும்போது இரு வேறு ஆட்களை ஒன்றாகக் குழப்புகிறார்.

அவர்கள் தலைவனான கட்டபொம்ம நாயக்கன் இரண்டு ஆண்டு