பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

357 கால்டுவெல்

 காரணங்களுக்காகப் பண்டகசாலைப் பொருள்களைச் சேகரிப்பதற்காகச் சென்றது. அந்நிலையில் எதிரிகளின் சிறுபடைகள் நாங்கள் திருச்சிராப்பள்ளியுடன் கொள்ளும் செய்தித் தொடர்புகள் எல்லா வற்றிற்கும் பல இடையூறுகள் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. அதுவே இந்தப் பயணத்திற்குக் காரணமாகவும் ஆயிற்று. அக் கோட்டையே அழகுள்ள கோயிலையுடையது. அது ஒரு மலையின் உச்சியில் அமைந்திருந்தது; அதையடுத்துக் கீழே சிறு கிராமம் இருந்தது. அது மதிலால் சூழப்பட்டிருந்தது. காவற்படை வீரர்கள் எங்களுடைய நடவடிக்கைகளிலிருந்து கோட்டையைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள் என் பதை உணர்ந்து மலைக்கு எதிர்ப்புறத்தில் காட்டுக்குள் செல்லும் பின் பாதை வழியாகத் தப்பி ஓடிவிட்டனர். எங்கள் தாக்குதலுக்கு அப் படையின் எதிர்ப்பு நேர்மையானதாயிருந்தது.

பேரமல்லி என்பது (படைஞர் படத்தில் பிரான்மலை) பிராமலை என்று அறிந்து கொள்ள வேண்டும். சரியாகச் சொன்னால் அது பிரான் மலை. அதாவது (பிரான்) விஷ்ணுவுக்கு விருப்பமான ஒரு புனித படிவம். காளையார்கோயில் பெருமைமிக்க சிவன் படிவம் அமைந்துள்ள கோயில். காளை என்பது காளை மாட்டைக் குறிக்கும். அது இங்கு சிவனது ரிஷபம் அல்லது புனித ஊர்தியாகிய காளைமாட்டைக் குறிக்கிறது. இங்குள்ள சிவன், காளை - ஈசுவரன் என்று வணங்கப்படுவான்.

அக்டோபர் 1 ஆம் தேதி காளையார் கோயிலை மூன்று வேறு திசைகளிலிருந்து குவிந்தாற்போல் சூழ்ந்து தாக்க முழுப்படையும் முன்னேறியது. இந்தப் படைப் பிரிவுகளில் ஒன்று முதல்நாளே புறப் பட்டு காட்டின் ஊடே வெட்டப்பட்ட பாதையில் இருட்டில் மறைந்து மறைந்து காளையார் கோயிலை அடைய வேண்டுமென்ற முயற்சியுடன் சென்றது. மற்ற படைகளுக்கும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இருந்தது. என்றாலும் இறுதியில் வலுவிலே முயன்று கோட்டையை நோக்கிப் படை முன்னேறிற்று. முந்திய நாளிரவு புறப்பட்ட படையின் ஆகூழைப் பற்றி திரு. ஹக்சு கூற்றாலேயே சொல்ல வேண்டும்.

நெருக்கடியான சூழ்நிலையில் சிறு வயலிலிருந்து எங்கள் படையால் அமைக்கப்பட்ட பாதையின் நிலையை ஹக்சேமிகக் கவனத்துடன் கண்காணித்து வந்தார். அவருடைய கூர்மையான அறிவு, அந்த இடம் முழுமையும் காவலின்றியே தற்போது விடப்பட்டிருந்ததால் எங்களது தலைமை இருப்பிடத்திலிருந்து வெகுதூரத்தில் எவ்வித முன் எச்சரிக்கைக்கும் அப்பாற்பட்ட இடத்தில் இருக்கின்றனரா என்று உறுதிப்படுத்துவதில் ஊன்றியிருந்தது. அந்த தூரம் எங்களால் சிந்திக்கத் தகுந்ததுதான். எனினும் சரியாக ஒவ்வொரு இடத்திலும்