பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 28


என்பதற்கு இடம் என்ற பொருளும் உண்டு. (1. உதாரணமாக பொதி - கை, மறைந்திருக்கும் இடம் (இயற்கை இன்னும் சிறந்த எடுத்துக்காட்டு - ந.ச.). கொற்கை உற்பத்தியாகிவரும் மலையின் பெயர் கொல்ரூன். ஒழுங்காகக் கொள்ளிடம், கொலை செய்யும் இடம் - என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த இரு சொற்களின் பொருளும் ‘கொல்கை’யில் இருப்பதால் தமிழ்மொழி அக்காலத்திலிருந்து இக்காலம்வரை மாறாதிருக்கின்றது என்பதை நாம் அறியலாம் (அதனால் தான் கன்னித்தமிழ் என்ற புகழ் - ந.ச.). இவ்விரு சொற்களும் கூட்டுச் சொற்களாய், சந்தியால் இனிமையான ஓசையுடன் இணைக்கப்பட்டிருக் கின்றன. ஆனால், இச்சொற்கள் அதே நிலையிலேயே இருக்கின்றன. (‘கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று’ (சிலம்பு. 6:162) என்ற இளங்கோ அடிகளின் வரியைக் கால்டுவெல் அறிந்திருந்தால் ஆற்றின் ஆற்றல் பற்றிய இயற்கையான பொருள் கொண்டிருப்பார் - ந.ச.).

தென் திருநெல்வேலி உட்பட்ட கரையும் தென் திருவாங்கூர் உட்பட்ட கரையும் பெரிப்புளூஸின் ஆசிரியரால் ‘பரிலியா’ என்று வழங்கப்பட்டன. குயிலானுக்குத் (Quilon) தெற்கேயுள்ள சிவப்பு மலைகள் என்று வழங்கப்படும் இடத்திலிருந்து கன்னியாகுமரி மட்டுமல்லாமல் கொற்கையும் சேர்ந்த பகுதியே அது. பரலியா என்பது கரை எனப் பொருள்படும் கிரேக்கச் சொல். இது கிரேக்கர்கள் அயல்நாட்டுப் பெயர் ஒன்றை எழுதுவது போலத் தெரியவில்லை. ஏனெனில், தாலமி என்பவர் பல பரலியாக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இப்பெயரால் வழங்கப்பட்ட கரையில் தாலமியால் குறிக்கப்பட்ட நாடாகிய தென் திருவாங்கூராகிய ‘ஆய் நாடு’ம் தென் திருநெல்வேலியிலுள்ள காரையும் சேர்ந்திருந்தன. காரையைப் பற்றி எழுதும் ஆசிரியர் ஒருவர் மற்றப் பாலியாக்களில் வசித்து வந்தார். காரை என்பது கரை என்று தமிழில் பொருள்படும். இது கரைத்தல் என்பதன் வினைப்பகுதி. இது பரலியா என்ற கிரேக்க சொல்லுக்குச் சரியான பொருளைப் பெற்றிருப்பது தெளிவாகிறது. இன்றுவரை திருநெல்வேலிக் கரையின் பெரும்பாகங்கள் கரைச்சுற்று (கரையைச் சுற்றியுள்ள பகுதி என்று வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வடக்கே செம்படவருள் ஒரு பிரிவினர் கரையர், கரைமக்கள் என்று வழங்கப்படுகின்றனர்) (கரையாளர் என்ற சாதிப்பெயரும் கருதத்தக்கது - ந.ச.), கரையைச் சுட்டும் இத்தமிழ்ச் சொல் தாலமியினால் குறிக்கப்பட்டுள்ள பல இடங்களுக்குப் பெயராய் அமைந்திருக்கிறது. ஆனால், இப்பெயருள்ள இடங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. உதாரணமாக ‘பெரிங்கரை’யைக் கருதலாம். இச்சொல்லில்