பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

365 கால்டுவெல்

 அந்தக் காலத்திலிருந்து அவர்கள் கடமையைக் கருத்துடன் செய் வதிலிருந்து பிறழச் செய்ய முயன்று வந்த தன்னலமுள்ள (யாருக்கு? - ந.ச.) தளவாய்ப்பிள்ளை செய்த முயற்சிகளையும் பொருட்படுத்தாமல் இருந்தனர்.

ஒழுங்கான ஊதியத்தினால் ஏற்படும் மகிழ்ச்சி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் முதலியவை அவர்களுடைய சூறையாடும் நோக்கத்தை மாற்றி அரசுக்குப் பணிந்து தொண்டு செய்யும் ஊழியர் களாக அவர்களை மாற்றியது.

எனவே அவர்கள்மேல் பாளையக்காரர்கள் கொண்ட ஆதிக்கத்தை அழிக்க எதுவும் தேவைப்படவில்லை. உறுதியான தன்னலம் காரண மாக அரசிடம் பாளையக்காரர்களுடைய பிணைப்பைப் பொறுத்த நில வாரக் குத்தகை அல்லது பேஷ்குஷ் பற்றிய எல்லா உரிமைகளையும் அவர்களிடம் ஒப்புவித்து விடவும் செய்தல் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை.

இந்த நிலவளிக் குத்தகையை இயல்பாக அவர்களுடைய ஊதியத் திலிருந்து ருசூம்கள்) கொடுக்கவேண்டுமென்றிருப்பினும் உண்மையில் அவர்கள் அத்தொகையைத் தம் கொள்ளைப் பணத்திலிருந்து பாளை யக்காரர்களுக்குச் செலுத்தி வருமாறு கட்டாயப்படுத்தப்பட்டுவந்தனர்.

முழு மாவட்டத்திலும் இருந்து சேர்ந்த தொகை எண் 16 இல் காட்டப்பட்டதைப் போன்றது. இத்தகைய கட்டணங்களிலிருந்து அவர் களுக்கு விலக்கு அளிப்பதாக நம்பிக்கையூட்டியுள்ளேன். இதுவே நேர்மையும் அறிவுடைமையுமான செயலென்று உறுதிப்படுத்துவீர்களென நம்புகிறேன்.

பாளையக்காரனின் ஏவலில் இருந்தபோது அவர்கள் பாளையக் காரனின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டது, அந்தத் தொகையை அக்காலத்தில் மிக எளிதாகப் பெறுவதற்கு முழுமையான வாய்ப்பாக இருந்தது.

ஆனால் தற்போது அவர்கள் காவல் வேலைகளில் இடைவிடாது ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதால், அவர்களுடைய சலுகைகள் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அளவைவிட இல்லை.

பொதுவாக நீங்கள் அறிந்ததுபோல் காவல்காரர்களால் எனக்கு ஏற் பட்டமனநிறைவில் நான்குனேரியை சேர்ந்த மறவர் காவல்காரர்களைத்