பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

399 கால்டுவெல்


கோயில் இதுவேயாகும். அக்கோயில் 1785 இல் ஸ்வார்ட்சினால் கடவுள் வழிபாட்டிற்கு உரிமையாக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த சிறு அடி யார் குழு மேலும் வளர்ந்திருப்பதைக் கண்டு, அதன் விளைவாகத் தஞ் சாவூரிலிருந்து திறமை மிக்க மத போதகரான சத்தியநாதனை அனுப்பிக் கோயில் பொறுப்பை ஏற்கச் செய்தார்.

ஜேனிக் (Jaenicke)

பாளையங்கோட்டை கோயில் அடியவர் குழு வளர்ந்து கொண் டிருந்தாலும் அருகாமையிலுள்ள நாடுகளிலும் அவர்கள் தங்களை ஈடு படுத்திக் கொண்ட வாய்ப்புகளையும் கண்ட ஸ்வார்ட்சு தொடக்கநிலை யிலிருந்த அச்சங்கத்தை ஏற்று நடத்த ஓர் ஐரோப்பியத் தொண்டரை நியமிக்க மிக விருப்பம் கொண்டார். ஸ்வார்ட்சின் இந்த விருப்பம் 1791 இல் ஜேனிக் என்ற ஜெர்மானியத்தொண்டரைப்பாளையங்கோட்டைக்கு அனுப்பிவைத்த போது நிறைவேறியது. ஜேனிக் அவரைப் போலவே, ஜெர்மானியர். ஆனாலும் அவரைப் போன்ற ஆங்கில சமயக் குழுவின் தொண்டராக - கிறித்து சமய அறிவைப் பரப்பும் குழுவைச் சேர்ந்தவராக (கிறித்துவ சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் - இந்தியாவின் முன்னோடியாக) இருந்தார். அவர் பாளையங் கோட்டைக்கு வந்து தன்னுடைய சமயப்பணிகளைத் தொடங்கினார். அப்பொழுது, பாளையங்கோட்டையிலும் அதைச் சார்ந்த சுற்றுப் புறங் களிலுமுள்ள உள்நாட்டுக் கிறித்தவர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்ந்திருந்தது. இந்தத் தொடக்க காலத்திலேயே கூட, கல்வி புறக்கணிக்கப்படவில்லை. 1784இல் ஸ்வார்ட்சின் வருகையிலிருந்து இன்றுவரை அவர்கள்செய்திருப்பதுபோல-அடியவர் குழுவும் பள்ளிகளும் இணைந்து நடைபோட்டன. பாளையங்கோட்டை மதபோதகர் சத்திய நாதன் இப்பொழுது தஞ்சாவூரில் சமயச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டு, ஜேணிக்னின் வருகைக்குச் சில மாதங்களுக்கு முன்னே பாளையங் கோட்டைக்குத் திரும்பியிருந்தார். அவர் திறமைமிக்கவர்; அந்த மாவட் டத்தில் தம் தொண்டின் பெருமையை நிலைநாட்டியவர். அவர் திருநெல்வேலியில் நிலையாக இருந்த முதல் உள்நாட்டு (தேசிய) அமைச்சராவார். இவர் மூலமாகவே சாணாரிடையே கிறித்துவ இயக்கம் தொடங்கியது என்று தெரிகிறது. முன் பக்கங்களில் குறிப்பிடப்பட்ட கத்தோலிக்க கிறித்துவர் சங்கத்தைச் சேர்ந்த சேவியர், பெஸ்கி போன்ற மிகப் புகழ்வாய்ந்தவராக இல்லை என்றாலும், தன் அளவில் அக்காலத் தில் திருநெல்வேலியில் இருந்த கிறித்துவ கத்தோலிக்க சங்கத்தைச் சேர்ந்த ஏனையவர்களைக் காட்டிலும் திறமை மிக்கவராகவே விளங்கினா ர். ஒரு சபையின் அடித்தளத்தை அமைக்கத் தக்கவராய் எல்லாத்துறைக