பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

413 கால்டுவெல்


நாடுகளைச் சேர்த்துக் கொண்டார். இவ்வாறாக மகாராசா நீண்ட நாட்கள் அந்த இடங்களை அடைய இயலாது போயிற்று.

ம.ஆ. 927(கி.பி. 1752) திருச்சிராப்பள்ளியில் இருந்த நவாபின் வைசிராயான மூடிமையா வலிமைபெற்று சுதந்திரப் படைத் தலை வனாகத் தன்னை ஆக்கிக் கொண்டான். அவன் மிக்க பேராசைக் காரனாக இருந்தமையால் கிராமங்களையும் எல்லைகளையும் போது மான அளவு பொருள் பெற்றுக் கொண்டு விற்றுவிட்டான். மகாராசா மூடி மையாவின் இச்செயலை அறிந்து தளவாய் இராமஐயனை அவன்வந்து தங்கியிருந்த திருநெல்வேலிக்கு அனுப்பினார். தளவாய் கிழக்கேயிருந்த எல்லைகளில் மகாராஜாவுக்கு இருந்த உரிமைகளை எடுத்துக் கூறினார். கன்னியா குமரிக்கும் களக்காட்டிற்கும் இடையே வள்ளியூர் உட்பட இருந்த சுமார் 30 மைல் பரப்புள்ள இந்த இடத்தை போதுமான மிகுந்த பொருள் கொடுத்து வாங்கிக் கொண்டார். இவ்வாறு திருவாங்கூரார் வாங்கிய மாநிலங்களைக் காக்கத் தளவாய் இராமய்யன் 2000 திரு விதாங்கூர் மகாராஜாவின் படைகளைக் களக்காட்டிலே நிறுத்திவிட்டு திருவனந்தபுரத்திற்குத் திரும்பினார்.

ம.ஆ. 930 (கி.பி.1755) இல் கர்நாடக நவாபான முகமது அலி தனக்குக் கீழ்ப்படியாமலும் தானே பாண்டிய அரசுக்குத் தனித்தலைவன் என்றும் விளம்பரம் செய்து கொண்டிருந்த மூடிமையாவின் உரிமைகளைப் பெற விரும்பினான். எனவே நவாபு தன்னுடைய படைத் தலைவன் மக்புசுகானை அனுப்பி மூடிமையாவை ஒதுக்கிவிட்டான். மக்புசுகானுடன் ஒரு சிறு படை அனுப்பிச்சென்னையிலுள்ள நவாபின் நட்பினராகிய - உறவு நாட்டவராகிய ஆங்கிலேயரிடம், தன் வேலையைச் செய்து முடிக்கவும், அங்குள்ள மக்களை அடிமைப்படுத்துவதற்கும் உதவி செய்ய ஒரு படைப்பகுதியை அனுப்புமாறு கேட்டுக் கொண்டான். மக்புசுகானுக்கு உதவி செய்யும் காரணத்தைக் காட்டி கர்னல் ஹிரான் 500 ஐரோப்பியர்கள் 2000 சுதேசிகளுடன் திருச்சிக்கு அனுப்பப்பட்டான். ஆனால் அவர்கள் செல்லும் வழியில் மதுரையின் வளமிக்க நாடுகளாலாகிய அழகிய, மிகுந்த் விளைவைக் கொடுக்கக் கூடிய பாண்டிய அரசின் மீது ஆங்கிலேயரும் ஒரு கண் வைத்திருந்தனர். அவர்கள் களக்காட்டை அடைந்தவுடன் அந்தக் கோட்டையில் தங்கி யிருந்த 2000 சிப்பாய்களடங்கிய திருவாங்கூர் படை எச்சரிக்கை யடைந்தது. நவாபின் படையோடு ஆங்கிலேயரின் படையும் சேர்ந்து வந்த படைக்குத் தங்களால் ஈடுகொடுக்க இயலாதென்று அவர்கள் கண்டு கொண்டு, கோட்டையையும் களக்காட்டையும் கைவிட்டு விட்டு (துறந்து) தோவளைக்குத் தம் படையுடன் பின்வாங்கினர். மீனம்