பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 432


3 மாதங்கட்குத் தொடர்ந்தது. இதனை எதிர்த்து வாழ்க்கையை அமைக்க முடியாமல் துன்புற்றனர். வீடுகளில் தங்க முடியவில்லை; தானியங்களை உலரவைக்க முடியவில்லை. இம்மழையில் ஏழைகளே, குறிப்பாக குடிசைகளில் வாழும் கள் இறக்குவோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். செல்வமிக்கவர்கள் நல்ல வீடுகளில் வசதியுடன் இருந்தனர்.

இதுபோன்ற பல காரணங்களால் மதுரை திண்டுக்கல் போன்ற பல இடங்களில் கொள்ளை நோய் தோன்றிப் பரவியது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனிக்குச் சென்று வந்த பக்தர்களால்தான் இந்நோய் பரவியிருக்க வேண்டும் என்று நம்பினர். ஆரம்பத்தில் இந்த நோய் தடுக்க முடியாதபடி அமைந்தது. ஒரு நாள் இந்நோய் ஒருவரைப் பிடிக்கும் மறுநாள் வலிப்பு ஏற்படும்; பொதுவாக மூன்றாம் நாள் மரணம் ஏற்படும். மரணத்தினின்றும் தப்பித்ததால் ஒன்பது நாள் அல்லது ஒரு மாதத்தில் நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும். முதலில் இந்நோய் திரும்ப வரின் பகலில் மட்டுமே இருக்கும். ஆனால் அதற்கு பின் மறு நாளும் திரும்ப வரும். பின்னர் இரத்த வாந்தி ஏற்படும். இவ்வாறு நோயின் தன்மைகள் என்னால் கணிக்கப்பட்டன. இது சரியோ தவறோ மருத்துவர்களின் குறிப்புகளும் இவ்வாறே அமைந்திருந்தது. இவ்விஷ யத்தில் அவர்கள் அக்கரையுடனும் ஆர்வத்துடனும் செயற்பட்டனர்.

இறுதிப் பத்து நாட்களுக்குள் காற்று அடங்கியது. காலச் சூழ்நிலையின் மாறுதல் நோய்க்கு ஒரு மாற்றத்தைத் தருமென்று மக்கள் நம்பினர். நோய் தடுக்கப்பட்டது; கொடுரமான சாவு குறைக்கப்பட்டது. இவ்வாறு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களால் தங்கள் அன்றாட வேலைகளைச் சரிவர செய்ய முடியவில்லை. சில குடும்பத்தில் அத்தனை பேரும் நோயால் பாதிக்கப்பட்டனர். காற்று நிலை குறைந் தாலும்கூட நோயின் தன்மை முழுவதும் மாறவில்லை.

இதற்குமுன் இதுபோன்ற நோய்க் கொடுமை நிகழ்ந்துள்ளதா என்று விசாரணை செய்த போது மக்களிடமிருந்து 34 ஆண்டுகளுக்கு முன்னர் இது போல் நிகழ்ந்ததாக அறிந்தேன். ஆனால் இதுபோல அது அவ்வளவு கொடுரமாக இல்லை. ஊர்மியின் 'இந்துஸ்தான் வரலாறு' என்ற நூலின் பழைய பதிப்பில் 201 ஆம் பக்கத்தில் இரண்டாம் பத்தியில் இது பற்றிய குறிப்புண்டு. 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருநெல்வேலியில் இரண்டு நாட்களாக மழை பெய்தது. அறுவடை பாதிக்கப்பட்ட, பல குடும்பங்களைக் கொள்ளை நோயால் சாகடித்தது. இரண்டு நாள் மழைக் கொடுமை பெரிதென்றால் 3 மாத மழை நிலையைக் கேட்கவா வேண்டும்.

இந்நோயை முதலில் விவரிப்பதற்கு முன்னர், பிப்ரவரி மாதத்தில்