பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

437 கால்டுவெல்


ஆனால் இது மிகத் தொன்மைக் காலத்ததாகக் கருதப்படவில்லை. இவர் 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னவராக இருக்கலாம் எனப் பண்டிதர்கள் கருதுகின்றனர். மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி நடை பெற்ற போது இவர் வாழ்ந்திருக்கலாம். வில்லிபுத்துர் என்பதற்கு வில்லுக்காரர்களின் புதிய ஊர் என்று பொருள். இது பற்றிப் பல புராணக்கதைகள் உள. இங்கு புகழ்பெற்ற வைணவக் கோயில் இருப்ப தால் ஸ்ரீ என்னும் அடை பெற்று விளங்குகிறது இவ்வூர். இது ஆழ்வார் திருநகரிக்கு இணையான மதிப்புடைய ஊராகும். இவ்வூரில் திருமலை நாயக்கருக்கு ஒரு அரண்மனை உண்டு. இது இன்றும் உள்ளது. அரசு ஆவணங்களில் இவ்வூர் நாச்சியார் கோயில் என்று குறிப்பிடப்படு கின்றது. இங்கு 14000 மக்கள் வாழ்ந்ததாகவும் குறிப்பு உண்டு.

பரிமேலழகர்

திருநெல்வேலியைச் சார்ந்த பரிமேலழகர் குறளுக்கு உரை எழுதியதின் மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்ததொரு இடத்தைப் பெற்றுள்ளார். தன் நிலையில் உரையாசிரியராக விளங்கினாலும் இவ் வகையில் இவர் முதன்மையாக விளங்குகின்றார். இலக்கியங்களுள் திருக்குறள் சிறந்து விளங்குவது போன்று உரைகளுள் பரிமேலழகர் உரை சிறந்து விளங்குகின்றது எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர். இவரது காலமும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இவர் திருநெல்வேலியின் வடபகுதியில் உள்ள கரிசல் காட்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகின்றார். இவரை ஒரு பிராமணராக வடக்குப் பகுதியில் குறிப்பிடுகின்றனர். சிலர் சாணார் அல்லாதவராக இருப்பினும் இவரை சானராகக் கருதுகின்றனர். சிலர் இவரைப் பிராமணரும் அல்ல சானாரும் அல்லர் வெள்ளாளர் என்று கருதுகின்றனர்.

நீதிநெறி விளக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மிக அண்மையில் வெளியான நூல் நீதிநெறி விளக்கமாகும். இந்நூல் நீதியைப் போதிப்பனவாக திருக்குறள் நாலடியார் போன்ற இலக்கியங்களை ஒத்து விளங்குகின்றன. இப்பாடலடிகள் தமக்கென ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளன. ஆனால் சில அடிகள் தகுதியிலும் தனித்தன்மையிலும் உயர்ந்து விளங்குகின்றன. பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு இது பயன்படுத்தப்படு கின்றது. இந்நூலாசிரியர் சைவ மதத்தினர், வேளாளச் சாதியினர் குமர குருபர தம்புரான் என்று அழைக்கப்பட்டார். தம்புரான் என்பது சைவ மடத்தின் தலைநகர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. இவர் இந்த மதத்தின் மடத் தலைவராக இல்லாவிடினும் மதிப்பிற்குரியவராக