பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

443 கால்டுவெல்



பிற்சேர்க்கை - V

கொற்கையிலும் காயலிலும் புதை பொருள் ஆய்வு

பல இடங்களில் ஆய்வு செய்ததில் இணக்கமான முடிவுகளைத் தொகுத்து 1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'இந்தியன் ஆண்டிகுயரில்' வெளிவந்த கட்டுரையை மேற்கோள் காட்டுகிறேன்.

கொற்கையை அடையாளம் கண்டது

பல ஆண்டுகளுக்கு முன்னொரு நாள் கொற்கையைப் பார்வையிடச் சென்றேன். அதுவொரு அவசரப் பயணமாக இருப்பினும் கூட அங்கு அறிந்ததை வைத்து ஒரு முடிவுக்கு வருகிறேன். தற்போது இவ்விடம் குறிப்பிடத்தக்கதன்று. என்றாலும் இது கிரேக்கர்களால் பெரிதும் போற்றப்பட்டது. கிறித்துவின் பிறப்புக்குப் பின்னர் கிரேக்கர்கள் இங்கு முத்துக்களை வாங்கினர். பல ஆண்டுகளுக்கு முன்னர் இது முத்து வணி கத்தின் தலைமையிடமாக விளங்கியது. கோடி எனப்படும் இராமேசுவரத் துடனும் கன்னியாகுமசியுடனும் இது வணிகத் தொடர்புடையது. இதனை மக்கள் மன்னர் வளைகுடா என்று குறிப்பிட்டனர். வணிகர்கள் கொற்கையைச் 'சங்கின் தொட்டில்' என்று குறிப்பிடுவர். இங்கு சேர சோழ பாண்டியர்கள் சகோதரர்களாகப் பிறந்தார்கள். பிறகு மூவரும் மூன்று சாம்ராஜ்யங்களை உருவாக்கினர். பாண்டியர்கள் முதலில் கொற் கையைத் தலைநகராகக் கொண்டனர். பின்னரே மதுரையைத் தலைந கராகக் கொண்டனர். கொற்கை என்பதற்குப் படைகளின் கூடாரம் எனப் பொருள். -

காயல்: கொற்கைக்கும் கடலுக்கும் இடையில் பழைய காயல் உள்ளது. இதனை மார்க்கோபோலோ ஒரு முக்கிய நகரம் என்றும் கிழக்குக் கடலின் துறைமுகம் என்றும் குறிப்பிடுகின்றார். இவ்விடங்கள் ஒரே காலத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இரண்டும் தாமிரபரணியின் கரை வெளியில் உள. கடலிலிருந்து கொற்கையும் காயலும் முறையே 5, 2 மைல் தூரத்தில் உள. கொற்கை, கடல் வாணிகத்திற்கும் ஏற்றவகையில் இயற்கை அமைப்புடன் விளங்குகின்றது. காயல் சீனா, அரேபியா போன்ற நாடுகளுடன் வாணிகம் செய்தது என்பதை இங்கு கிடைத்துள்ள