பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 444


உடைந்த மட்டாண்டங்கள் மூலம் அறியலாம்.

இரு இடங்களிலிருந்தும் கடல் பின்வாங்கல்

கால மாற்றத்தால், காயல் கடலை விட்டு விலகிவிட்டது. போர்த்துக்கீசியர்கள் தூத்துக்குடியில் குடியமர்ந்தனர். தூத்துக்குடிதான் திருநெல்வேலி மாவட்டத்தில் தலைமைத் துறைமுகமாகும். இங்குத் துறைமுகத்தின் அருகில் ஆறில்லை. காயலைப் போன்று கொற்கை அவ்வளவு சிறப்பான வாணிகத்தளமாக இல்லாவிட்டாலும் ஒரு காலத்தில் அதற்கு இணையாக விளங்கியது எனலாம். இதனை இங்கு கிடைத் துள்ள மட்பாண்டங்களால் அறியலாம். கொற்கையில் பரவலாக இவை கிடைத்தாலும் இதன் அருகிலுள்ள அக்கசாலையில் அதிகம் கிடைத் துள்ளன.

கொற்கையில் புதை பொருளாய்வு

இங்கு ஆய்வு நடந்த போது நான் கோவிலின் சுவரைக் கண்டேன். 12 கூலிகள் மூலம் 4 நாட்கள் இங்கு தோண்டும் வேலை நடைபெற்றது. ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் இவ்வேலை எனது உதவியாளின் மேற் பார்வையில் நிகழ்ந்தது. இம்மாவட்டத்துக் கலெக்டர் எனக்கு ஒரு வேலையாளை மக்களிடமிருந்து தொல்லை வராமல் பார்த்துக் கொள்ள அனுப்பினார். அவர்கள் விரும்பாவிட்டாலும் பயன் மூலம் கிடைக்கும் பொருளின் பட்டியலை அனுப்பி வைத்தேன்.

கொற்கையின் புவியியல்

கொற்கையில் கிடைத்துள்ள பழமைச் சின்னங்களைவிடப் புவியியல் அமைப்பே வியப்புக்குரியது. இது தாமிரபரணி கரையில் உள்ளது. இது மிகப் பள்ளமான கடற்கரைப் பகுதியாகும். ஆற்று வண்டலால் மேல் பகுதி களிமண் படிந்துள்ளது. ஆழ்கடல் சங்குகளும் படிந்துள்ளன. உழவுத் தொழிலுக்குப் பயன்படாத நிலமாகவும் விளங்குகின்றது. மாறமங்கலத்தின் சாலையில் நடக்கையில் சங்குகள் காலைக் குத்துவதுண்டு. இந்நில அடுக்கின் ஆழம் சராசரி ஆறு அடிக்குமேல் இராது. குளத்தின் ஆழம் 3 அடிக்கு மேல் இராது. உப்புக் கற்களும் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடைபடாத சிப்பிகளும் இப்பரப்பில் நிறைந்துள்ளன. பல விநோதமான சிப்பிகளும் பழைய கடற்கரைப் படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிப்பிகளின் அண்மைக்காலத் தோற்றம்

இங்கு கிடைத்துள்ள சிப்பிகள் சில மிக அண்மைக்காலத்தில் உயிர் வாழ்ந்தது போன்று தோற்றமளிக்கின்றன. இங்கு மக்கள் ஏறக்