பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iii

மூலநூல் ஆசிரியர் பிஷப்டாக்டர்கால்டுவெல் பற்றி

நல்லுரை

கால்டுவெல் (1814-1891) கிருத்துவ சங்கத் தொண்டராய் 1838 ஆம் ஆண்டில் சென்னை மாநகர் வந்து சேர்ந்தார்.

அப்போது அவருக்கு வயது 28.

அது முதல் அவர் 53 ஆண்டுகள் நமது அருமைத் தமிழ்நாட்டில் அருந்தொண்டு புரிந்தார்.

திருநெல்வேலி நாட்டிலுள்ள இடையன்குடி என்னும் சிற்றுரை அவர் இருப்பிடமாகக் கொண்டார்.

நெல்லை நாடு அவரைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டது.

இவ்வாறு தம்மை ஏற்றுக் கொண்ட நெல்லை நாட்டிற்குச் சிறந்த முறையில் நன்றி செலுத்தினார் கால்டுவெல்.

திருநெல்வேலி நாட்டுச் சரித்திரத்தை வரைமுறையாக முதன் முதல் ஆங்கிலத்தில் எழுதியவர் அவரே.

அதனைச் சென்னை அரசாங்கத்தார் அச்சிட்டு வெளிப்படுத்தினர். ஆசிரியருக்கு ஆயிரம் ருபாய் நன்கொடையும் அளித்தனர்.

பாண்டி நாட்டின் பழம் பெருமையை அச் சரித்திர நூலில் பரக்க காணலாம்.

- பேராசிரியர் டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை.