பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 80


இயல் - 3

கி.பி. 1365 - 1731

பிற்காலப் பாண்டியர் ஆட்சியும் நாயக்கர் அரசும்

இரண்டாம் முறையாக அரியணை ஏறிய பாண்டிய அரசர்கள்

முகம்மதிய ஆட்சியைப் புறங்கண்டபின் ‘பாண்டிய மன்னர்’ என்று தங்களை வழங்கிக்கொண்ட அரச மரபினர் மீண்டும் தமது பழமையான அரசுரிமையை ஏற்கலாயினர். 1311 இல் முகம்மதியர் ஆட்சி தொடங்கியது. 1348 இல் அது உன்னத நிலையை அடைந்திருந்தது என்று இபுபடுடா என்பவர் கூறுகிறார். ஆனால், புதிய பாண்டிய அரச மரபைச் சார்ந்த ஒருவன் ஒருவேளை அம்மரபின் முதலரசனாகவும் இருந்திருக்கக் கூடியவன் - காலத்துக் கல்வெட்டு ஒன்றைக் கோட்டாற்றில் நான் கண்டேன் (பாதிரியாரின் ஆராய்ச்சி உழைப்பை உன்னுக.ந.ச.). இக்கோட்டாறு முன்பு பாண்டிநாட்டின் ஒரு பகுதியாயிருந்தது. இப்போது தென் திருவிதாங்கூரிலிருக்கின்றது. கி.பி.1370க்குச் சரியான சக ஆண்டு பராக்கிரம பாண்டிதேவன் ஆட்சியின் ஐந்தாவது ஆண்டு என்று கூறப்படுகிறது. எனவே, பராக்கிரம பாண்டியன் 1365 இல் பட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். புதிய அரசமரபின் ஆட்சி தொடங்கிய காலத்தை இச்சம்பவம் சரியாகக் கணக்கிட உதவுகிறது.

மகம்மதியர்களை எதிர்க்கத் தேவையான உதவி எதையும் பாண்டியர்கள் பெற்றார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் பெற்றார்கள் என்று கருதலாம். அவர்கள் தனித்திருந்து போரிட்டு விடுதலை அடைந்திருக்க இயலாது என்பது முடியாததன்று. பரம்பரை வரலாறு கன்னட தளகர்த்தர்களிடமிருந்து உதவி பெற்றதாகக் குறிப்பிடுகிறது. திரு. டெய்லர் என்பவரால் வெளியிடப்பட்டுள்ள வரலாற்றுச் சார்புடைய ஆவணங்கள் ஒன்றில் கனரிஸ் அல்லது கன்னட தளகர்த்தனாகிய மைசூர்த் தளகர்த்தரான கம்பண உடையார் மதுரையை முற்றுகையிட்டு முகம்மதியர்களை