பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

மொழி யென்று பெரும்பாலும் நிறுவப்பட்டு வருகின்றமை. (3) வடமொழி வளர்ச்சியுற்ற காலத்தில், பிறமொழித் தாக்குதல்களால் வட இந்திய மொழிகள் திரிபுற்றமைக்கு என்னென்ன நியதிகள் காணப்பட்டனவோ அந்நியதிகளை இக்கால வடநாட்டு மொழிகளும் பின்பற்றிவருகின்றமை.

இச் செய்தியைக் குறித்து 1872-ல் பீம்ஸ் என்பார் ”ஆரியச் சார்பற்ற இக் கால இந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்”[1] என்ற நூலில் பின்வருமாறு விளக்கியுள்ளார்: ”இனி, வடமொழியுமல்லாத ஆரியமுமல்லாத சொற்களைப் பற்றி ஆராய்வோம். ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது தமக்குமுன் அங்குக் குடியிருந்த மக்களோடு நெடுநாள் போரிட்டு நாட்டை அவர்களிடமிருந்து பறித்தாக வேண்டியிருந்தது. அத்தகைய போர்களுக்கிடையே அமைதி நிலவிய காலமும் இருந்திருத்தல் வேண்டும். அப்போது இரு திறத்தினரும் கலந்து ஒருவருடன் ஒருவர் கருவிப் போர் செய்யாது, வாழ்க்கைப் போர் நடாத்தியிருப்பர். ஆரியால்லாதா ரிடையே ஆரியரது தாக்கே மிகுதியாயிருந் திருப்பினும், ஆரியரிடையே ஆரியரல்லாதார் தாக்கும் ஒரளவிற்கு இல்லாதிருக்க முடியாது. ஆகவே, வடமொழியிலேயே ஆரியச் சார்பற்றனவாகத் தோன்றும் சொற்கள் சில காணப்படுகின்றமை இயல்பே. இக் கால வட இந்திய மொழிகளிலோ இச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. எனவே, எச் சொற்கள் ஆரியச் சொற்களாகத் தோற்றவில்லையோ அவையெல்லாம் ஆரியச் சார்பற்றவையே என்று கூற முன்வருவது வழக்கமாகிவிட்டது.

“இங்ஙனம் ஆரியர்கள் பழங்குடிகளிடமிருந்து கடன் வாங்கினர் என்ற கொள்கையை ஒப்புக்கொள்வதற்குத்

1.

-


  1. “A Comparative Grammar of the Modern Non-Aryan Languages of India" by John Beames B. C. S. 1872.