பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மூலமொழியின்......... மொழி எது ?

123

தோற்றுகிறது ; அஃதாவது என்றும், எவ்வளவு தொலைப்பட்ட பண்டைக் காலத்தும், எந்தவிடத்தும், ஆரிய இனத்தாருள் எவ்வகையோராலும் அது பேசப்பட்டதில்லை. அதன் பெயர் ஸம்ஸ்கிருதம் என்பதில் இருந்தே அது பண்படுத்தப்பட்ட, நிறைவு படுத்தப்பட்ட மொழி என்று விளங்குகிறது. அஃது; ஓரினத்தாரது மொழியோ, ஓரிடத்தின் மொழியோ அன்று; ஒரு வகுப்பாரின் மொழி: அஃதாவது புலவர், கவிஞர், அறிஞர் ஆகியோர்களது மொழி; சுருங்கக் கூறின் அஃது இலக்கிய மொழியாம். எனவே, இலக்கிய வளர்ச்சி முன்னேற முன்னேற, அதுவும் வளர்ந்து பெருகிப் பண்பட்டு வந்தது. உயிர் என்பது வளர்ச்சி, வளர்ச்சி என்பது மாற்றம் என்ற பொருளில் வழங்குமாயின், வடமொழி உயிரற்ற மொழியன்று, உயிர் ததும்பி நிற்கும் மொழி என்றே. பல்காலும் கூறத்தகும். எனினும், அதன் வளர்ச்சி மட்டும் மிகவும் மெதுவானதொன்று (இந்தியாவில் எல்லாப் பொருள்களும் மெதுவான வளர்ச்சியுடையனவே); பேச்சுமொழியை விட மெதுவான வளர்ச்சியுடைய தென்பதற்கு ஐயமேயில்லை. புராண வடமொழி வேத வடமொழியின் மாறுபட்டது; வேதங்களுக்குள்ளேயும் அதன் பிந்திய மந்திரங்கள் முந்திய மந்திரங்களை நோக்க மொழியில் மாறுபாடுடையவை. ஆனால், நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான வட மொழிகூடப் பேச்சு மொழியன்று, பண்பட்ட மொழியேயாம். அதுவும் பேச்சு மொழியிலிருந்து பண் பட்டதன்று; தனக்கு முந்தி வழங்கி இறந்துபட்டதோர் இலக்கிய மொழியினின்று பண்பட்டதேயாகும். இங்ஙனம் வடமொழி இலக்கியமொழியாதல் பற்றி, வட மொழியா லியன்றுள்ளது ஒரு நால் என்ற காரணத்தால் அந்நூல் பழைமையானது என்று முடிவு கட்டி விடுதல் கூடாது. ஏனெனில், புத்த சமயத்தவர் நீங்கலாக வட இந்திய, மேல