132
கால்டுவெல் ஒப்பிலக்கணம்
வழக்கு மிகப் பழைமையானது என்று ஏற்படுகிறது. தமிழின் பழைமைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.
தமிழில் வந்துள்ள வடமொழிச் சொற்கள் வெவ்வேறு காலத்திற்குரிய மூன்று வகைப்பட்டவை:
(அ) அவற்றுள் காலத்தால் மிகப் பிந்தியவை சமய நூல்களில் வழங்குபவையாம். தமிழ்நாட்டிலுள்ள சமயங்களுள் மக்களிடையே செல்வாக்குடையவை மூன்று: முதலாவது, ஆகமங்களைப் பின்பற்றி எழுந்த சைவ சித்தாந்தம். தமிழரிடையே[1] பெருவழக்கா யிருப்பதும் இதுவே. அத்து விதத் தலைவரான சங்கராச்சாரியரது கட்சி இரண்டாவது. இராமானுஜரது வைணவம் இவ்விருவரது கட்சிக்குமே எதிரிடையானது. இம் மூன்று கட்சியினரின் சமய நூல்களும் தழைத்தோங்கிய காலம் 11-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டுவரை என்னலாம். இன்றியமையாச் சில மாறுதல்கள் நீங்கலாக, இவற்றுட் பெரும்பாலும் காணப்படுவன தூய வடமொழிச் சொற்களே.
(ஆ) மேற்கூறிய சமயத் தலைவர்கள் காலத்திலும், அதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னும், அஃதாவது 9, 10-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டுவரை, இருந்த சமணர்களே[2] தமிழில் இன்று காணும் வட சொற்களிற் பெரும்பாலானவற்றை வழக்கிற்கொண்டுவந்தவர்கள் ஆவர். சமணர்கள் அந்நாள் தழைத்தோங்கியது அரசியல் உலகில் அன்று; கல்வியுலகினும் அறிவுலகிலுமே யாம். உண்மையில், அவர்கள் தழைத்தோங்கிய காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்று கூறத்தக்கது. மதுரையில் சங்க மிருந்ததும், குறள், சிந்தாமணி முதலிய செந்தமிழ் நால்களும், இலக்