பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஸூத்திரர் என்னுஞ் சொல்லின்-வழக்கும்

167


பார்ப்பனர் முதலில் அவர்களை ஸூத்திரர் என்றழைத்த போது அப்பெயர் மதிப்பிற்குரியதோர் பட்டப்பெயர் என்றே அவர்களிடம் கூறி அவர்களை ஏமாற்றியிருக்கக் கூடும். இவ் ஏமாற்றும் வெற்றியடைந்ததென்றே கூறலாம். வட இந்தியாவில் ஸூத்திரர் எல்லா வகுப்பிலும் தாழ்ந்த வகுப்பினர்; தென் இந்தியாவிலோ, ஸூத்திார் பார்ப்பனருக்கடுத்தபடியான உயர்ந்த வகுப்பினர் ஆவர். உண்மையில் க்ஷத்திரியர், வைசியர் என்பவற்றை யொப்ப, ஸூத்திரர் என்பதும் திராவிடருள் எவ் வகுப்பினோர்க்கும் பொருத்த மற்ற பெயரேயாம் என்க. திராவிடரை ஆரியப் பாகுபாட்டுடன் தொடர்பு படுத்தாமல் திராவிடர்தம் மபிரற்கேற்ப வேளாளர், நாயக்கர் என்று அவரவர் பழங்குடிப் பெயராலேயே அழைத்தலே சால்புடைத்தாகும்.