பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


அந்தத் தோல் பையையே இமைக்காமல் நோக்கினுள் கிழவி. அடிக்கொரு வாட்டி கிழவி, கிழவி என்ருல் நன்ருக இல்லையல்லவா ? அவளுக்கு அழகான பெயர் இருந்தது. அவள் சொக்கி பணப்பை கக்கிய பணம் நோட்டுக்களாக வும், நயா பைசாக்களாகவும், வேறு சில்லறை நாணயங் களாகவும் கிளே பரப்பியது. விரல் விட்டு எண்ணினுள். இரு பத்தைந்து ரூபாய்க்குப் பதினேழு காசு குறைச்சல், மீட்டும் பார்த்தாள் கிழவி. காசும் பணமும் சுழன்றன. பற்று அறுத்த தவமுனரியின் பற்று இழந்த பார்வையல்லவா அது ? திடீரென்று அவள் பார்வை கலங்கியது. காரணம் இதுவே. மாரியின் முகம் அவளது நினைவில் கலந்தது. ம், அச்சா ! அப்படியே இருக்கான். எம்புள்ளே மாணிக்கமே மறு பொறப்புக் கொண்டு வந்திருக்கிருப்போலவே தோணுது பேசாம. அவன் திண்டிவனத்திலேயே இருந்திருக்கப் புடாதா? அந்தக் குட்டி மங்கம்மா சொக்குப் பொடி போட்டு எம் மவனைப் பம்பாய்க்குக் காடு மாத்திக் கூட்டிக்கினு போயிட் டாளே ! அப்பன் பரலோகம் பறிஞ்ச கதைகூட அவனுக்குத் தெரியாதே பாவி நான் ! பத்து மாசம் சொமந்த புண் னியத்துக்குக்கூட என்னைப்பத்தித் துளி அக்கறை கொள்ளக் காணுமே அந்தப் புள்ளே. எதுக்கும் அதிஷ்டம் வேணு மில்ல .' எண்ணங்கள் இறந்த காலத் தடத்தில் வழி நடந்தன. - தட்டிக் கதவு தட்டப்படும் ஒசை புறப்பட்டது. கிழவி உணர்வைக் கூட்டி எழுந்தாள் ; சேலைத் தலைப்பினல் முகத் தைத் துடைத்தாள். கைவிளக்கு வெள்ளெழுத்துப் பார் வைக்குக் கை கொடுத்தது. “ Lofrifiut ?” ம் !” r ع مه ۰ ஊம் கொட்டிக்கொண்டே வெளிக்கதவின் வழியை முடின்ை. இருட் செறிவில் ஒளிச் சிதறல் அடங்கியது. * மாரி, எம் வீடு எப்படி ஒனக்குத் தெரியும் უ :: 14