பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


': இந்தா, புடிச்சுக்க. கெடைக்கிறப்ப துட்டைத் தந்துப்புடனும்.ஆமா !” மாரியின் பார்வையில் செம்பாதி கிழவி நீட்டிய சாதத் தி லும், மிகுதி பிசிறு பாய்ந்தது சட்டைக்காரி ஒருத்தியிடத் திலும், அழகுப் பாவையின்மீதும் பகிர்ந்தோடியது. பிறகு, சாதத்தை வாங்கிக்கொண்ட மகிழ்வுடன். பதற்றம் பதிந்த பார்வையைப் பரப்பி விசிஞன், வெடிப்புக் கண்டிருந்த இதழ்க் கங்கிலே குறுமுறுவல் தடம் காட்டிற்று. உணவைக் கண்டு ஒன்பது நாட்கள் இருக்குமோ ?...பறக்கப் பறக்கச் சாப்பிட வேண்டும் என்ற துடிப்புடன், முதற் கவளத்தை அப்படியே கொத்தாக அள்ளினன். முருங்கைக்காய், பூசணித் துண்டுகள் விரல்களிடையே நழுவின. சாதத்தை வாய்க் கருகே கொண்டு சென்ற போது, அவனுடைய சோற்றுக் கை நடுங்கியது. மனச் சான்று நடுங்குவது உண்டாமே ! மறுகணம், கவளச் சோறு கை நழுவியது, விரல் வழி வழிந்த இன்பத் தேன் போல. சோற்றுப் பருக்கைகள் ஒட்டி உற வாடின விரல்கள் நிஜார்ப் பைக்குள் சென்று மீண்டபோது, பர்ஸ் ஒன்று முகங்காட்டியது. பர்ஸை எடுத்துக் கிழவியின் காலடியில் வீசி ஒன். பறந்தான். 'யாபாரத்திலே கவனமா யிருந்த அந்தக் கிழவி, எப்படியும் அந்திக்குப் பணப்பையைக் கண்டு அதை எடுத்து வச்சுக்கிடும். நல்ல வேளை ; செகப்புத் தொப்பிங்களுக்குத் தப்பிச்சாச்சு ஆமா, எம் மூஞ்சியை அந்த இன்ஸ்பட்டரு எப்பிடிக் கண்டுபிடிக்க முடியும் ? சந்துமுனைத் திருப்பங்களின் வழியே மாரி போய் விட்டான். கருக்கிருட்டு கொறுக்குப்பேட்டைப் பகுதி என்னல் இருட்டுக்குப் பஞ்சம் இருக்க முடியுமா? அகல் விளக்கின் ஒரத்தில் கிழவி குந்தியிருந்தாள். சூறைக் காற்றுக்கு மல்லுக் கொடுத்தது விளக்கு சமாளித் தது. விளக்கு எரிந்தது. காற்றலைகள் சுருக்கம் பாய்ந்த மனிக்கு இதம் தந்தன.