பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


தீர்த்து உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆறுதல் படிந்த உணக்கையை உண்டு பண்ணத்தான் மேலும் காசுகள் உருண் டோடி வந்து வீழ்ந்தன போலும் தருமசிந்தை கொண்டவங்க நீங்க ! நல்லா எழுதிக் கிடக்கோணுமாக்கும் ! கறுப்பனும் மாரியும் உங்களுக்குத் துணை இருப்பாங்க !” என்ருன் கையெடுத்துக் கும்பிட்டவாறு தன்னே மறந்து அப்படியே நின்ருன் அவன். பொட்டுப் பொழுதிற்குள் அத்தனை கும்பலும் எப்படித் தான் பாம்பைக் கண்ட படையாகக் கலைந்ததோ ? சுருக்குப்பை நிரம்பி வழிந்தது. செங்கோடனின் குழி விழுந்த கண்கள் இரண்டும் தளும்பித் தத்தளித்தன. பெருமூச்சு பூ நாகமாய் வெளியே றிற்று. எம்புட்டு நேசக் கண்ணுட்டி என்ைேட கண்ணு ரெண்டையும் திறந்து வச்சுப்புட்டுத் தன்ைேட அழகான கண்ணு ரெண்டையும் மூடி எட்டு மாசம் கழிச்சு, இண்ணிக் குத்தான் வரும்படி உபரியாய் மிதந்து கிடைச்சிருக்குது !... அஞ்சலை இருந்திருந்தாக்க, இம்மாம் பொழுதுக்கு பயாஸ் கோப்பிலே ஆடுறதாட்டம் ஆடிப்பாடிக் காட்டி யிருக்காதா? ...நான் பொசுப்பு இல்லாத கட்டையாகிப் பூட்டேனே ! . ஐயையோ!...ம்...அது இட்ட ஆணையைக் கட்டிக்காக்கத் தானுக்கும் இந்தக் கட்டையிலே ஊடாடிக்கிட்டு இருக்கிற இந்தப் பாளத்த உசிரை வலுக்கட்டாயமாய்க் கெட்டியாய்ப் பிடிச்சுக்கிட்டும் இருக்கேன் - நினைவுகள் தாழம்பூச் சிதறல்களாக மனத்தன. கனிந்த கடமைப் பண்பு பூண்ட ஓர் ஆறுதலோடு, சுருக்குப் பையை இடுப்பில் முடியிட்டு மகுடியுடன் செருகிக் கொண்டான். பெட்டிப் பாம்பைத் தோளில்ே தொங்கவிட்டவகை, நகரலாளுன் மதுரை விரன் பின்னே தங்கி விட்டார். செங்கோடனின் கால்கள் பூமியில் பாவின. சுருக் கென்றது. அவனுக்கு பாவம், சன்னசிக் கிழம் ...எம். பேரிலே அவருக்குக் கெட்டாப்பிலே வயித்தெரிச்சல் மூண்டி