பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113


மையத்தில் விரிக்கப்பட்டிருந்த கந்தல் கிழிசலில் இப் போது காசுகள் விழத் தொடங்கின. பிடாரன் செங்கோடன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். ஈசனுக்கு மாத்திரம்தான் பாம்பை அணியத் தெரியுமா, என்ன ? அவனும் அந்தப் பாம்பை பாசத்தின் அன்போடும் அன்பின் பாசத்தோடும் குழந்தையை அள்ளி யெடுத்து அணைத் துக் கொள்வதைப் போன்று வாரியெடுத்து அனைத்துக் கொண்டபின், கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு, கூட்டத்தை வலம் வந்தான். கைதட்டல் மீண்டும் ஒலிக்கிறது : எதிரொலிக்கிறது. " ஐயாமார்களே ! அம்மாமார்களே ! எ ன் ே ைட * நல்லதை நல்லாப்பாருங்க. பல்லுப்போனுலும் சொல்லு போகப்புடாது அப்படின்னு ஒரு பேச்சுச் சொல்லுறது நாட்டுவளமை, ஆளு, என்னுேட இந்தச் சாமிக்குப் பல்லுப் போயிடல்லே. ஆகச்சே, அதோட சொல்லும் போயிடவே போயிடாதுங்களே ...பார்த்திங்களா இந்த ரெண்டு கோரைப் பல்லையும் ?...பாம்புக்கு விஷம்பல்லிலேன்று செப்புவாங்க, மெய்தான் அட்டியில்லேதான். ஆன, இந்த நல்லபாம்பு சத்தியத்துக்கும் தர்மத்துக்கும் மகுடிக்குக் கட்டுப்படுற தொப்பக் கட்டுப்பட்டதாக்கும் ! பல்லுப் போன பாம்பைப் பிடிச்சாந்து பாவலா காட்டி, ஒங்களே ஏய்ச்சுப் பிழைக்சிற ஈனச் சென்மம் இல்லேங்க நான் ! நான் செங்கோடனுங்க ! பதில் வெட்டு இல்லாத அசல் குறப் பொறப்புங்க ...ஆன தாலே, அவங்க அவங்க கையிலே மடியிலே இருக்கிறதை வஞ்சனே பண்ணும இந்த ஏழை பாழை மேலே இரக்கப்பட்டு விசிட்டு நடங்க. உங்க வாய்க்கு ஒரு வாட்டிக்கு வெத்திலைச் சருகுக்காகும். ஆளு, எங்க ரெண்டு ஜீவன்களும் பசியாறுற புண்ணியம் உங்களுக்கு ஆகும். எனக்குப் படி அளக்கிற எஞ்சாமி இது; இதுக்கு நான் படிபோட வேணு மில்லீங்களா?.. உணர்ச்சிப் பெருக்குடன் பேசிக் கொண்டே சுற்றி வந்து நின்ருன் பாம்பாட்டி. ஆற்ருமை மேலிட்டது. களைப்பைத் 15