பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e e e தரிசனம் முத்துமாரியம்மன் தேரோட்டம் நடந்து முடிகிறது !... பொன் அந்தியின் பூந்தென்றலிலே அழகு மகுடியின் தேனமுதப் புன்னுகவராளி பூம்புனல் வெள்ளத்தின இசை அலைகளாகிப் பொங்கிப் பெருகி வழிகிறது : வழிந்து கொண்டே யிருக்கிறது. முன்னடியான் சந்நிதியிலே அந்த நல்லபாம்பு நாதப் பாம்பாகி, மகுடியின் நாதத்தில் மயங்கியும் கட்டுப் பட்டும் படம் எடுத்துப் படம் விரித்து மெய்ம்மறந்து ஆடுகிறது ; ஆடிக் கொண்டிருக்கிறது !... பலே...சவாசு ... ' கரவொலி. செங்கோடன் புதிய தெம்போடு கருவம் துலங்கத் தலையை நிமிர்த்தினன். மூச்சு வாங்கியது. பொருட் படுத்துவான ? கைகளிலே நளின முடன் இழைந்திருந்த மகுடியை இடுப்பில் லாகவமாகச் செருகிக் கொண்டான். பின், தேள் கொடுக்கு மீசையை ஒருமுறை கம்பீரத்தோடு தடவிவிட்டுக் கொண்டான். அவன் பார்வையில் தெம்பு துறத்தது. சுற்று முற்றும் பார்வையை ஒட விட்டான். அவன் அட்டகாசமாகச் சிரிக்கக் கேட்கவா வேண்டும்?. r