பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165


" அதுக்கு நான் என்ன செய்வேன். ஐயா !” " நீ என் கையிலேருந்து ரூபாய் இருநூத்தி ஐம்பது கடன் வாங்கினது உண்மை தானே ?” 窦 ஆமா !” " பின்னே என்ன்? உன் புரோநோட்டு இல்லாட்டி என்னவாம் : நாணயத்துக்குக் கட்டுப்பட்டவகை இருந் தால், எனக்குச் சேர வேண்டிய தொகையை என்கிட்டே செலுத்திப்புடவேண்டியதுதானே நியாயம் ?” மாரியப்பன் நிர்த்தாட்சிண்யமாகவும் அட்டகாசமாகவும் சிரிக்கலானன் : ஐயா செட்டியாரே! எனக்கு முன்னுடியே காது குத்தியாச்சுங்க. உங்க கூத்தும் தந்திரமும் என் கிட்டவா பலிக்கும் ? நான் உங்களுக்கு எழுதிக்கொடுத்த நோட்டு காளுமப் போயிடுச்சின்னு சொல்லி, நையம் பாடி, இப்ப ஒரு வாட்டி எவ்லாப் பணத்தையும் கறந்துக்கிட்டு, அப்பறம் நீங்க கமுக்கமாய் ஒளிச்சு வச்சிருக்கிற அந்தப் புரோநோட்டைக் கோர்ட்டிலேபோட்டு ரெண்டாம் வாட்டி யும் சாடாப்பணத்தையும் வசூல் பண்ணிக்கிட வேணுமென் கிறது உங்க சூதுமதித் தந்திரம் சுயபுத்தியோட வந்திருக் கிற எனக்கு இது கூடவா புரியாது, செட்டியாரே ?' என்று மீண்டும் எக்காளமிட்டுச் சிரித்தான் மாரியப்பன், சுப்பையவிேன் இரத்த நாளங்கள் அத்தனையும் சூடேறித் துடித்தன. அட பாவி என்னை மோசடிக்காரளுகவா நீ எடை போடத் துணிஞ்சிட்டே? அயோக்கியப் பயலே " என்று ரோசம் பொங்க, மாரியப்பன அறையக் கையை ஒங் அந்தக் கணத்திலே, அத்தான், அத்தான் ' என்று கவிக்கொண்டே குறுக்கே விழுந்து தடுத்து விட்டாள் வள்ளி யம்மை.