பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iği; அதே நேரத்தில், மிச்சான், மச்சான் ' என்று கூறிய படி வந்தாள் செண்பகம். மண்முட்டி விண்முட்டச் சிரித்த மாரியப்பன் இருந்திருந் தாற் போலே ஏன் இப்படி விம்மிப் புடைத்து உருகிக் கரைய வுேண்டும் ? எப்பையா திகைத்தார், வள்ளியம்மையையும் செண்பகத்தையும் விநயமாக ஒரு முறை பார்த்து விட்டு, மாரியப்பன் பேசத் தலைப்பட்டான் செட்டி யார் ஐயா முதலிலே நீங்க பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சாக வேணும். தங்கமான உங்களைத் தவறுத லாக எடை போட நான் துணிவேனுங்களா ? சும்மா அப்படி நடிச்சு ஒரு பொய்க்கூத்து நடத்தினேன். ஐயா, முதலிலே உங்க பணத்தைப் பிடியுங்க. முந்நூத்தி நாற்பது இருக்குதுங்க ' மாரியப்பன் பணத்தைச் சுப்பையாவின் கைகளிலே சமர்ப்பித்தான். மாரியப்பன், ! ஐயா, நான் உங்களுக்கு எழு இக் கொடுத்த அந்தப் பிராமிசரி நோட்டு காணுமப் போயிடுச் சேன்னு ரோசிக்கிறீங்களாங்காட்டி ? மதியம் இங்கே பேப்பர் நிறுக்கையிலே அந்த நோட்டு என் கையிலேதான் சிக்கிச்சு துங்க காகிதக் குப்பைங்களுக்கு ஊடாலே அந்தப் புரோ நோட்டைக் கண்டடியும் நானும் மிருகமாகத்தான் மாறிப் டேன். ஆளு, தெய்வம்னு ஒண்னு இருக்குதுங்களே, அது என்னுேட கண்ணத் திறந்து விட்டிருச்சுங்க கேளுங்க கதையை "என்று சொல்லி நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந் தான் : "ஐயா, அதோ நிக்குதுங்களே செண்பகம், அதுதானுங்க நான் தொட்டுத் தாலி கட்டின பெண்சாதி. அதுக்குத் துரோகம் செஞ்சிட்டுக் குடியும் கூத்தியுமாய்த் தட்டுக்