பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


மணி. சிதறி விழுந்த அந்தப் பத்திரிகையை எடுத்தார். பிசிறுகள் உதிரலாயின. எடுத்த எடுப்பில் ஒர் அதிசயம் வெளிப்பட்டது. மணி வாய்விட்டு வாசிக்கலானர்.

  • காணவில்லை.'

இந்தப் படத்திலுள்ள என் தந்தை தேவிபட்டினம் உயர்திரு. கு. காசிநாதக் கங்காணி, என் பேரில் கொண்ட சிறு மனஸ்தாபம் காரணமாக, தம்முடைய சொத்துசுகத்தை யெல்லாம் துறந்து, கடந்த இருபத்தியேழு மாதமாக எங்கோ கண் காணுத இடத்தில் தலை மறைவாக வைராக்கி யத்தோடு இருந்து வருகிருர் ஆட்டுக்குட்டி வளர்க்க வேண்டாமென்று நான் சொன்னேன். அவர் கேட்கவில்லை. ஆத்திரத்தில் புத்தியில்லாமல் திட்டிவிட்டேன்! ரோஷக் காரர் அவர் ! யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீசின. கையும் வெறுங்கையுபாக இரவோடு இரவாக வெளி யேறிவிட்டார், என் தெய்வம் ! இதுவரை தேடாத இடம் இல்லை, போடாத விளம்பரம் கிடையாது. நாங்கள் குடும் பத்தில் பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்து வருகிருேம்.... ஆகவே, இந்தப் புகைப்படத்திலுள்ள பெரியவரை இனம் காணும் புண்ணியவான் யாராக இருந்தாலும். உடனே ரகசியமாக கீழுள்ள என் விலாசத்கக்கு தந்தி கொடுத்து உதவும்படி ரொம்பவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். கோடிப் புண்ணியம் கிடைக்கும். ....அவர்களுக்கு வேண்டும் பணத்தை அள்ளிக் கொடுப்பேன். அங்காளம்மை பேரில் ஆணே இது !.... - . கத்தரிக் காட்டுக் கிழவர் உணர்ச்சிவசப்பட்டுச் செரும லானர் ; ; மனுசர் விதியோட எப்படி எப்படியெல்லாம் விளையாடிப் பார்த்திருக்கார் ....அட கடவுளே ! மணி முகத்தைத் துடைத்துக் கொண்டார்.