பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


ரஸ்தாவில் தீர்க்கமாகப் பதித்தவண்ணம் நின்ருன். சுடு நீரில் விழுந்த சுண்ணும்புக் கிளிஞ்சல்களென அவன் மனம் பொங்கி எழுந்தது. முத்தாயிக்கு உடம்பு சொகமாயிடுமா ? பொழுதுக்குள்ளாற நாலு மூணு சம்பாரிச்சு, சுருக்குப் பையிலேயிருக்கிற துட்டையும் சேர்த்தடிச்சு. நல்ல டாக்டர் கிட்ட அதை இட்டுக்கினு போய்க் காட்டி வைத்தியம் வாகனம் செஞ்சாத்தான் முறைக் காச்சல் ஒரு முட்ட" நிற்கும் !....கார்பொரேஷன் மருந்துக்குத்தான் சீக்கு படிய மாட்டேங்குதே ....ஏழை பாழைங்ககிட்டயிருந்து பணம் காசு விலகியிருக்காப்பிலே. நோய் நொடியும் தள்ளிக் குந்தப் படாதா ??...என்று எண்ணி மருகினன் அவன். கலங்கி வந்த கண்களைத் துடைத்துக்கொண்டான் அவன். நாகரீகத்தின் கெடுபிடிக்கு இலக்காகி நடைபயின்ற இளம் தம்பதியை ஒதுக்கியவாறு திரும்பினன். சவாரி வேணுமா, சாe ?” என்ருன். சுமுகமான பதில் வரவில்லை. அவன் ரிக்ஷாவுடன் ஒடத் தொடங்கினன். ஒடினவன் ஓர் உருவத்தைக்கண்டு மகிழ்ந்தான். உருவத்தின் ஸ்லாக் சங்டையில் தலை காட்டிய வாறு இருந்த ஸ்டெதஸ் கோப் கருவி அவனுள் பாலை வார்த்ததோ ? ' சாமீ, வண்டி வேணுமா ? எங்கே போகனும் ?’ என்று வினயமாக வி ைவிடுத்தான் ரிக்ஷாக்கார மணி முத்தன். - - - “ தங்கசாலைவரை போகணும். ஒரு அவசரமான விஷயம். எனக்காகக் காத்துக்கொண்டிருப்பாங்க, சீக்கிரம் போயாக னும் 12: ஒ1.ஒரு நிமிட்டிலே ஒட்டமா ஒடிப்புட்ரேன், சாமி!” ஒகே !' நெரித்துப் புடைத்த மனித மந்தை, பஸ், கார் வகைய முக்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது ரிக்ஷா, முத்தாயி யின் காதலுக்கு வசப்பட்ட இன்பக் கனவின் நிழலாட்டம்