பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதாபிமானம் புன்னகை செய்கிறது ! Lblarifಬಗ್ தியேட்டரை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே ஏர்க்காலிலே ஒர் அழுத்தம் கொடுத்துப் பற்றிய வாறு, தாதா முத்தியப்பன் தெருவுக்கு மடங்கினன் மணி முத்தன். குதிகாவில், ரிக்ஷாவின் சக்கரங்கள் பட்டுப்பட்டு விலகின. அந்தி சந்தி வேளே. ஆனலும், வெய்யிலின் உக்கிரம் தணிந்தால் தானே ? ஒரு வழிப்பாதை என்ற சட்டத்திற்குத் திரையிட்ட ஒரு லாரிக்காரன், நல்ல வேளை மணிமுத்தன் மீது மோதாமல் சட்டத்தை மோதிய பெருமையுடன் பறந்தான். போலீஸ் விவில் ஒளியை அவன் செவிமடுக்க, பைத்தியமா, என்ன ? பிராட்வே வந்தது. சீனத்துக் கடைத்தெருவை நாடி ஒடிஞன். கிராக்கி கிடைக்கும்; துட்டும் கிட்டும். நடை பாதைக் குடும்பம் ஒன்று அவன் பார்வையில் பட்டது. அவன் மனம் அவனுடைய குடும்பத்தைச் சுற்றி சுழன்றது. ரிக்ஷாவின் கைப்பிடியை லாகவமாகப் பற்றியவளுக, மூச்சை யும் பற்றிப் பிடித்துக்கொண்டு, அடிப்பாதங்களைத் தார்