பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


" ஏனப்பா, நான் தங்கசாலைக்குப் போக வேண்டுமென்று சொல்லவில்லையா ?’’

  • யாரு சாமி இல்லேன்னு சொன்னது ?”

பின்னே... ?’’ “ சாமி சாமி! எம் பொஞ்சாதி க்கு விஷ சொரமுங்க நாலு நாளாச் சாப்பிட்ட மருந்துங்க ஒரு பலனேயும் தரலே, ஒங்களைக்கண்டதும், எனக்குத் தெய்வத்தைக் கண்டாப்பிலே தோனுச்சு, ஒருவாட்டி வந்து பார்த்து மருந்து குடுங்க. இந்த ஏழை கையிலே இருக்கிற துட்டைத் தாரேனுங்க, சாமி ... கண்ணு மூடித் திறக்கிறதுக்குள்ளே உங்களேத் தங்கசாலை யிலே சேர்த்துப்புடுறேங்க. பெரிய மனசு பண்ணுங்க, டாக்டர் துரையே !' என்று விம்மினன் ரிக்ஷா ஒட்டி. அந்த இளைஞனுக்குத் திகைப்பு வளர்ந்தது. நான் டாக்டர் இல்லேப்பா !” ஏஞ்சாமி இப்படிப் பொய் பேசுறீங்க ?...இந்த ஏழை யைக் கண்டதும் ஒங்க உத்தியோகம் கூட மறந்து போச்சா? ஐயையோ!...முத்தாயி...” அவன் கேவிஞன். அப்போதுதான் அந்த நபருக்கு விஷயம் புவிந்தது தன்னைத்தானே ஒருமுறை பார்த்தார். சட்டையில் தான் வைத்திருந்த ஸ்டெதஸ்கோப்பை-நாடிக் குழலைப் பார்த்துக் கொண்டார். . .

  • இந்தாப்பா நான் டாக்டர் இல்லை; சத்தியம் நம்பு ”
  • எம் பொஞ்சாதி சாகப் பிழைக்கக் கிடக்கிரு. ஒனக்கு ஈவிரக்கம் இல்லையா! நீ பின்னே படிச்சதெல்லாம் இப்பிடிப் புளுகத்தான? து ! நீ வெறும் மனுசன் ” என்று. உணர்ச்சி வசப்பட்டுக் கூறியவாறு, அந்த இளைஞனின் கன் னத்தில் அறைந்துவிட்டான் ரிக்ஷாக்கார மணிமுத்தன்.