பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


அக்கணத்தில், அங்கே டாக்ஸி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மனிதர் புயலாக மணிமுத்தன் முடி யைப் பற்றி, ஏண்டா நாயே ' என்று கர்ஜனை செய்தவாறு கை ஓங்கிய வேளையில் ஸ்லாக் சட்டை இளைஞன் பாய்ந்து தடுத்தான். ' அண்ணு தவறு இந்த ஏழையினுடையதல்ல; என்னுடையது. அவனை ஒன்றும் செய்யாதீர்கள். நேற்றைய நாடகத்திற்காக நான் உங்களுடைய ஸ்டெதஸ் கோப்பை வாங்க்யிருந்தேனல்லவா ? அதை அப்படியே சட்டையில் வைத்துக்கொண்டு வந்திருக்கிறேன். நாடிக் கருவியைக் கண்டவுடன், என்னை அசல் டாக்டரென்று நம்பிய இந்த ஏழை, நான் சத்தியம் செய்தும் நம்ப மறுத்துவிட்ட்ான் ! இவன் மனைவி சாகப் பிழைக்கக் கிடக்கின்ற வேதனை தூண் டிய வெறியில் தான் என்னை அறைந்தான் ! பாவம் ! அண்ணு, எனக்காக ஒரு உபகாரம் செய்யுங்கள். அடுத்த தெரு திருப்பத்தில் உங்கள் காரை மறித்து அரைமணிக்கு முன் இதே ரிக்ஷாக்காரன்தான் கெஞ்சிக்கொண்டிருந்தான். தூரத்தேநின்று திரும்பிய நான் அக்காட்சியைப் பார்த்தேன். ஆபத்துக்கு உதவவேண்டுமென்றுதான் அவன் விம்மி வெடி திருக்க வேண்டும். உங்களுக்கு ஏதோ அவசரம். காரில் பறந்து விட்டீர்கள் ! அண்ணு, எனக்காக இப்போது ஒர் உபகாரம் செய்யுங்கள். இந்த ஏழையின் மனைவியைப் பிழைக்கச் செய்யுங்கள் அண்ணு ! இளைஞன் வேதனை விம்ம, கண்ணிர் வெடிக்கப் பேசினன். ஒலைகள் பிய்ந்து கிடந்த குடிசையில் பெண் உருவம் ஒன்று படுத்துக்கிடந்த காட்சியை அவன் கண்டிருக்க வேண்டும்,

  • சரி தம்பி, கடமையிலே மனிதத் தன்மையோடும் ஈவிரக்கம் கூடிய அன்புடனும் நடக்கும் எனக்குக் கூம் இப்படிப்பட்ட சோதனைகளே ஆண்டவன் ஏன்தான் உண் டாக்குகிருரோ? நீ போ. தம்பி இந்த ரிக்ஷாவாலாவின் பெண்சாதியைப் பிழைக்க வைக்கிறேன் ....