பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


அதே சமயம் அவரது கண்கள் அடுத்த பில்லேயும் அத னடியில் இருந்த நோட்டையும் துருவின. ஏறிட்டு நிமிர்ந் தார். அண்ணுச்சி ! இந்த நோட்டுச் செல்லாது. வேறே கொடுங்க” என்ருர். இதமான பேச்சுத்தான். அட்டியில்லை. வாடிக்கைக்காரர், இந்த நோட்டுக்கு என்னங்க ? ரெண்டு ரூபாய்க்குத் தாராளமா செல்லுமுங்களே?’ என்று மறுமொழி கொடுத்தார். குரலில் நைச்சியம் கலந்த கடு கடுப்பு. . சேர்வைக்காரரின் முகம் பின்னமடைந்து சிறுத்தது. 'ரெண்டு ரூபாய் நோட்டு ரெண்டு ரூபாய்க்குச் செல்லு படியானல் போதாதுங்களா ? நீங்க கொடுத்த இந்தக் கிழிசல் ரெண்டு ரூபாய் நோட்டு என் கடையிலே ஓடாது. ஆனதினலே, வேறே கொடுங்க. இல்லாட்டி,தொண்ணுாறு பைசாவாகச் சில்லறை கொடுத்திடுங்க. வியாபார நேரத் திலே வீணு வாயாட நேரம் இல்லே ' என்று பட்டுக் கத்தரித்த மாதிரி பேச்சைக் கத்தரித்து விட்டு, அடுத்த பில்’லைக் கவனிக்கலாஞர். முழுப் பெயர், முத்தையாச் சேர்வை. என்ருலும் அவரைச் சேர்வைக்காரர் என்றுதான் ஆவணத்தான் கோட், டைச் சாலை வட்டாரத்தில் அழைப்பார்கள். சேர்வை தேநீர் விடுதி என்ருல், சுற்று வட்டாரத்தில் ஒரு நல்ல பெயர். அங்கே போட்டுக் கொடுக்கும் சாயா மட்டுமல்ல தோசை, குருமா, சூப், அதிரசம் எல்லாமே குடும் சுவை யும் கொண்டிருக்கும். மகமாயிக்குப் பயந்து சத்தியத் தோடவும் தருமத்தோடவும் நடக்கவேனும் என்கிறதுதான் என் கொள்கை. அப்பாலே ஆத்தா விட்ட வழி ...' என்பார் அவர் அடிக்கடி. மணி ஒன்று அடித்தது. அதாவது, மணி எட்டு முப்பது. சத்தடிப் பையப் பைய முடங்கிக் கொண்டிருந்தது.