பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


முத்தையாவுக்கு அப்போதும் சிரிக்க மட்டுமே தெரிந்தது ! . . கல்லாகச் சமைந்திருந்த வள்ளியம்மை, திட்டி வாசலில் நடையன் சத்தம் கேட்டதுமே எச்சரிக்கை அடைந் தாள், மஞ்சள் பூச்சும் குங்குமத் திலகமும் பிசகாமல் வேர்வை. முத்துக்களே ஒற்றியெடுத்தாள், கொண்டைப் பூச்சரத்தைச் சரிசெய்தாள். சரிந்து விழுந்து கிடந்த பொங்கல் பட்டினைச் சீராக்கிக் கொண்டாள். புதுக் கருக்குக் குலையாமல், வாங்க மச்சான் ' என்று முகமன் மொழிந்தாள். தாய்ப் பசுவின் பால் மடியை நக்கி நப்பு : க் கொட்டிக் கொண்டிருந்தது வெள்ளேக் கன்று. வெண்மைக்கென்று ஒர் எழிற் கவர்ச்சியா ? முத்தை பாச் சேர்வை அந்தக் கன்றை அள்ளக் குறை யாத பாசத்தோடு-பாசப் பரிவோடு-பாசத் தவிப்போடு மெல்ல மெல்ல-மெள்ள மெள்ளத் தடவிக் கொடுத்தார். கைகள் காற்றிடை அல்லாடித் தள்ளாடும் மலர்களாக நடுங்கின. - . வள்ளியம்மையின் விழி முனைகள் கசிந்தன. அவள் தன் அன்புக் கணவனேயும் அந்தப் பசுங் கன்றையும் மாறி மாறிப் பார்த்தாள். வெய்துயிர்ப்பு சுட்டது, . . . . . . வள்ளியம்மை ! ' என்று அன்போடும் பாசத்தோடும் நேசமுற அழைத்த முத்தையாச் சேர்வைக்காரர் தம் அருமை மனைவியையும் அந்த வெள்ளைக் க ன் று க் கு ட் டி ைய யு ம் நோக்கினர். நெஞ்சிடை நீக்கமற நிறைந்து பிரதிபலிப்புச் செய்த வண்ணம் இருந்த அந்த வெள்ளை நிறத்தில் விளைந்த அமைதியோடு அவர் வள்ளியம்மையை மறுபடியும் ஊடுருவி ஞர். வள்ளிப் பொண்ணே நம்பளோட ஆசைக் கனவை எப்பத்தான் ஆயி மகமாயி பலிதமடையச் செய்யப் போகிருளோ, விளங்கலையே? வாங்க மச்சான், பசியாறலாம்! " 8