பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


“ பார்த்தால் தெரியலியாங்களாக்கும் ? நான் சின்னப் பையன் !’ சேர்வை வினயமாகச் சிரித்தார். வாஸ்தவம்தான். அது தெரியாதாப்பா. நீ எந்த ஊர் ?....உன் அப்பன் யார்? ஆத்தா யார்?' என்று அடுத்த விசாரணையைத் தொடங்கி, ஞர் அவர். சட்டைக் காலரை வெகு அமர்த்தலாகத் தூக்கி விட்ட வகை, சேர்வையை ஏகத்தாளமாக முறைத்தான் சிறுவன். "அந்தக் கேள்விக்கெல்லாம் விடை தர இது சமயம் இல்லே!....பசியைத் தாள முடியல்லே எனக்கு. அதாலே மூச்சுப் பிடிக்கச் சாப்பிட்டிட்டேன். மடியிலே காசு இல் லாமல் சாப்பிட்டது. நியாயம் இல்லேங்கிறது தெரியும்தான். நான் என்னு செய்யட்டும் ? பசிக்கு என் நிலைமை புரியாமல் பூட்டுதே ?....சரி, விஷயத்துக்கு வாரேன். உங்களுக்குச் சேர வேண்டிய காசு பணத்துக்கு வேணும்னு அரை நாள் நான், உங்க அடுப்படியிலே கூலி வேலை பார்த்துக் கொடுத்துப்பிடு. றேன். ஆனால், என்னேட சொக்காயைக் கழற்றச் சொல்ல உங்களுக்கு யாருக்கும் அதிகாரம் கிடையாதாக்கும் !’ என்று சட்டம் பேசின்ை பொடியன். அண்ணுச்சி எழுந்தார். அவரது காய்ப்புக் கண்டிருந்த கைகள் துருதுருத்தன. அண்ணுச்சியை நோக்கிக் கையமர்த்தலானுர் சேர்வை. "ஏ தம்பி! நீ செஞ்ச தப்பு உனக்குப் புரிஞ்சிருக்கு. அது போதும். நீ சாப்பிட்ட காசுக்கு வேலை வெட்டி ஒண்னும் செய்ய வேணும். மூச்சு விடாமல் நடையைக் கட்டு ' என் முர் முத்தையாச் சேர்வை. அதே அமர்த்தலோடு-அதே ஆணவத்தோடு அந்தச் சின்னப் பயல் முறைப்பாகவும் விரைப்பாகவும் தயங்கித் தயங்கி நடந்தான். வெளியே ! " நீ சுத்த மோசம், முத்தையா 1"