பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


y 'சரிடா, மேல் சொக்காயைக் கழற்றுடா அப்படின்னு சொன்னக்க, முடியாது அப்படின்னு சவடால் பேசுருனுங்க, முதலாளி !' சேர்வை ஏனே அந்தக் சிறுவன இமை கொட்டாமல் பார்த்தவண்ணம் இருந்தார். கண்கள் இரண்டும் ஏன் அப்படித் தொளி உழுத வயலாகிவிட்டதாம் ? கோவிந்தன், டேய், சட்டையைக் கழற்றுடா ! என்று ஆணை பரப்பினுன் மறுபடியும். " முடியாதின்ன முடியாதுதான் !' சின்னப் பயலுக்கு இப்படியொரு நிர்தாட்சிண்யமான வாய் வீச்சா ? முத்தையா சேர்வை முன்கோபி. என்ருலும், அப்போது அவர் மனத்தில் அந்தத் திருட்டுப் பயலின் திமிர்வாதம் பதியவில்லை , அந்தச் சிறுவனின் பால்வழியும் வதனம்தான் பதிந்தது. பனங்குளம் அண்ணுச்சிக்கு மீசை துடித்தது. மீசை நரைத்தால் என்னவாம்? அது துடிக்கத் தெரியமாட்டாதா? * முத்தையா ! என்னுத்துக்கு அப்பிடி மலைச்சிட்டே ? அந்தக் களவாணிப் பொடிசை உ க் கி ரா ன த் தி லே போட்டு அடைச்சி' என்று அடுத்த உபதேசத்தை முன்மொழிந்தார். அண்ணுச்சியா, கொக்கா ? . . . . . சேர்வை பனங்குளம்காரரையும் பொடியனையும். மாறி மாறி-மாற்றி மாற்றிப் பார்வையிட்டார். மகமாயி ; எங்க எழுத்தும் நல்லதனமாய் விதிச்சிருந்தாக்க, வள்ளியம்மை வயிற்றிலேயும் ஒரு பூச்சி பொட்டு உண்டாகியிருந்தாக்க, இந்தப் பயல் கணக்கிலே வளர்ந்திருப்பானில்ல!'தொண்டை யைக் கனத்துக்கொண்டார் ; மீசையை நீவிவிட்டார். லேஞ்சை எடுத்து முக விலாசத்தை லவகமாகத் துடைத்துக் கொள்ளவும் தெரிந்திருந்தது. அவர் பார்வை தடம் புரண் டது * திசை மறுகியது. ஏனப்பா, 虚 யாரு?" என்று அடங்கிய குரலெடுத்து விசாரித்தார் முத்தையா சேர்வை.