பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.4 விதியை ஒத்துச் சிரிக்க ஆரம்பித்தார் அண்ணுச்சி, * முத்தையா, நீ பாவியா ? ஊகூம், நான் ஒப்பமாட்டேன். நீயும் புண்ணியவான் ஆகலாம். ஆனல், நீதான் எம் பேச்சை ரோசிச்சுப் பார்க்கமாட்டேங்கிறியே? வள்ளியம்மை கிட்டே பயப்படாமல் ஒரு வார்த்தை சொல்லிப்புட வேண்டியது தானே ? உன்னுேட சொத்துச் சுகத்தைக் கட்டி ஆளவும் உங்களுக்கு எள்ளும் தண்ணியும் இறைக்கவும் உனக்கின்னுi -உங்களுக்கின்னு ஒரு வாரிசு வேணுமாக்கும் ? தைக்கெடு தப்புறதுக்குள்ளாற நீ துருசு காட்டித் தலையை அசைச் சிட்டா, நான் சொன்ன பூவாத்தகுடி குட்டியைத் திகைச்சிட வைச்சிடுவேன் ' என்று உபதேசம் பண்ணினர். சேர்வை வழக்கத்தை மாற்ருமல் நெடுமூச்செறிந்தார். ரோசனை பண்ணிச் செப்புறேனுங்க அண்ணுச்சி !’ என்ருர். முன்ருனை விரித்த ஆசை வள்ளியம்மையின் பவித்திரமான அந்த வெள்ளைச் சிரிப்பை அவர் எப்போதுதான் மறந்தார் ? விதிப் பேச்சை - விதியின் பேச்சை மடை மாற்ற வேண்டும் * தாகத்துக்கு ஏதாவது சாப்பிடுங்க, அண்ணுச்சி என்ருர், அண்ணுச்சியின் முறுக்கு மீசை விழித்தது. * இன்னிக்குப் பொங்கல். இன்னிக்கு நீங்க காசு பணம் தர வேண்டாமுங்க ! "ஓ, அப்பிடியா ?...ம்... !” டி மாஸ்டரைத் தேடினர் சேர்வை. அப்போது ; பலகாரம் பரிமாறும் கோவிந்தன் யாரோ ஒரு பொடி யனைத் தலை முடியை மூர்த்தண்யமாகப் பற்றிப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தான். கோவிந்தா! என்ன சங்கதி!' 多妾 இந்தத் திருட்டுப் பொடிப்பயல் வள்ளிச்ா ஒரு ரூபாய்க் குத் தின்னுட்டுக் கொல்லையாலே ஒடப்பார்த்தான். கையும் களவுமாமாய் லாந்திப் பிடிச்சிட்டேன். காசு இல்லையாம்.