பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


  • பரவாயில்லை மாயா. உன் வரவிற்குத்தான் எல் லோரும் அப்போதிருந்தே காத்திருக்கின்றனர். அன்னே பூமி படத்தில் உன் ஏ ஒன் வெற்றிக்குத் தங்கள் சந்தோ ஷத்தை நேரிலேயே சமர்ப்பித் துப்போக ஆசைப்பட்டுத்தான் ரசிகர்களும், அபிமானிகளும் கூடியுள்ளார்கள் ' என்று. சொல்லி, மாயாவின் பூங்கரங்களைப் பற்றியபடி உள்ளே நுழைந்தார் டைரக்டர் ; சிகரெட்டின் பின்னல் புகை' உயர்ந்தது.

இருவரையும் ஜோடியாகக் கண்டவுடன் காத்திருந்தவர் களின் முகங்கள் சந்தோஷத்தால் மலர்ந்தன, டின்னர் ’ தொடங்கியது. பிரசித்தி வாய்ந்த நடிகை மிஸ் மாயாவின் முழு ஜெயத்திற்குத் தங்கள் உள்ளக் களிப்பைத் தெரிவித்துக் கொண்டதுடன், அன்புப் பரிசுகள் பலவற்றையும் வழங் கினர். டின்னர் முடிந்தது. மாயாவை நேரில் பேட்டி கண்டு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது பெரிய அதிர்ஷ்டம் எனக் கருதியவர்கள் போன்று ரசிகர் குழாம் கலந்தது. அன்றையூ மாலை நிகழ்ச்சி பூராவையும் கண்ட அவளுக்கு அனைத்தும் ஒரு கனவு போலவேதான் தோற்றம் கொடுத்தது. மாயாவின் மார்பகம் ஒரு கணம் விம்மித்தாழ, ஆழ்ந்த பெருமூச்செறிந் தாள். - - - - அப்புறம் அதிக நேரம் டைரக்டரும் மாயாவும் அள வளாவிப் பேசி மகிழ்ந்தனர் என்பதற்கு கட்டியங் கூறுவது மாதிரி, தரையில் சிதறிக் கிடந்தன சிகரெட் துண்டுகள் பல. அவர்களுடைய இழை பின்னிக் கிடந்த மோன நிலையைக் கலேத்தது சுவர்க் கடிகாரம். மாயா விடைபெற்றுக் கொண் டாள். சந்திரமெளலி அவளைப் பிரியா மனதுடன் வழி யனுப்பி வைத்தார். 橡, 鬱 举 蠍 திரைப்பட உலகில் ஈடுசோடில்லாத ஓர் சுறந்த சினிமா ராணி மாயா வயதும் வாலிபமும் சந்திக்கும் வளம் கொழிக் கும் பருவம். இளமை அவள் கோமள மேனிக்குப் புது மெரு கிட்டது. சங்கீதம், நடிப்பு, செளந்தரியம் அவளிடம் சங்க