பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e e e LDf ll_lff பிரபல சினிமா நட்சத்திரம் மாயா நிலைக்கண்ணுடியின் முன் நின்று விழுங்கும் விழிகளால் ஒரு முறை தன் அழகின் பூரணத்துவத்தின் எல்லையைக்கணக்கிடுவது போல ஏறிட்டு நோக்கிள்ை. மை தீட்டப்பட்ட வில் புருவங்களின் மத்தியில் ஒளி உமிழ்ந்த திலகமும், சிருங்காரம் கொப்பளிக்கப் புட் டாமா பூசியிருந்த வதனத்திடையே மிளிர்ந்த உதட்டுச் சாயமும் அவள் மனதிற்கு அன்று நிரம்பவும் பிடித்திருந்தன. இடையில் மின்னிய ஒட்டியானத்தைச் சிறிது தளர்த்தினுள். போதை யூட்டும் ரீதியில் அவள் மேலாடை சற்றே நெகிழ, கவர்ச்சி கனிந்தது. - தயாராக நின்ற காரில் ஏறிக் கொண்ட மிஸ் மாய" ஸ்டுடியோவை அடைந்ததும் அவளை வரவேற்க இன்முகங் காட்டி ஓடி வந்தார் டைரக்டர் சந்திரமெளலி. • . . " டைரக்டர் ஸார், ரொம்ப டைம் ஆகிவிட்டது போல் இருக்கிறது. கோபமில்லையே டிரெஸ்ஸிங்கில் இன்று கொஞ்சம் அதிகப்படியான கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது ' என்று தன் இதழ்களில் புன்னகை மலர் தூவிக் குழையும் குரலில் சொல்லி விட்டு வெண்ணிலவு சிதறும் நெற்றியில் முத்து முத்தாகப் பூத் திருந்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொண்டாள் மாயா.