பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


தேசியம், ஹிந்தி ட்யூனில் அமைக்கப் பெற்ற பாட்டுகள் போன்ற தந்திரங்களைக் கையாண்டார். வெற்றி கிடைத் தது. எதிர்பார்த்ததற்கு மேல் மாயாவின் புகழ் உச்சி மேவிற்று. பத்திரிகைகள் மாயாவைப்பற்றிப் பத்தி பத்தி யாக எழுதின, இவ்விதம் மாயாவை மருவி வந்து கொண்டிருந்த மதிப் பையும், புகழையும் கண்ட டைரக்டருக்கு அவளைத் தன் துணைவியாக்கிக் கொள்ள ஆவல் பிறந்தது. விஷயத்தைப் பிரஸ்தாபித்தார். மாயாவிற்கும் அந்த எண்ணம் சரி யெனவே பட்டது. மேலும் அப்போதுதான் கண்கொத்திப் பறவைபோல் தன்னைப் பற்றிக் கண்காணித்துவரும் சமூகத் தின் சூழ்நிலையிலிருந்து தப்ப முடியும் என்பதையும் தீர உணரலானுள். பின் சம்மதமும் கொடுத்தாள். அடுத்த படப்பிடிப்பு முடிந்ததும் தம்பதிகளாக எண்ணினர்.

  • அன்னை பூமி சம்பாதிப்த புகழின் வெற்றிச் சுவட்டி லேயே அடுத்தபடியாகத் தயாரிக்கப் போகும் மாயா மோகினி ' படத்தின் கதாநாயகனுக நடிக்கத் தேர்ந்தெடுக் கப்பட்டிருந்த் ஜோதிநாத் என்னும் புது நடிகரை மாயா விற்கு அன்று அறிமுகம் செய்து வைப்பதாக டைரக்டர் வாக் களித்திருந்தார். சாயங்காலம் ஸ்டுடியோவிற்குப் புறப்பட ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்த அவள் பெண் மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைபாய்ந்தன. தன்னுடன் முக்கிய பாகமேற்று நடிக்கவேண்டிய அப்புது மனிதர் எவ்விதம் இருப்பார், பழகும் விதத்தில் எத்தகைய மனப்பான்மை யுடையவரோ என்பது போன்ற நினைவுச் சுழற்சியில் அயர்ச்சியுற்ருள் ஏனென்றல், முதல் படத்தில் முக்கிய பாகத்தை டைரக்டரே ஏற்றுக் கொண்டார். நெடுநாளாகப் பழகிப் போனதால் அவருடன் ஒட்டி நடிப்பதில் லவலேசமும் அதிர்ச்சியோ அல்லது திகிலோ ஏற்படவில்லை மாயாவுக்கு ஆளுல் ஜோதிநாத் ...? -

இவ்விதம் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருக்கையில் மிகவும் ரகசியம்’ என்று டேஞ்சர் சிக்னல் காட்டி நின்ற தபால