பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


நீட்டினன் வேலைக்காரப்பையன். பதட்டத்துடன் அதைப் பிரித்துப் படித்தாள். “ அம்மணி ' முன்னும் பின்னும் தெரிந்திராத இடத்திலிருந்து இக் கடிதம் வருவது கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம். அதிசயப் படலாம். ஆனல் பாலை நிலத்தில் காயும் நிலவு போன்று என் வாழ்நாட்கள் வீளுகிவரும் துரதிருஷ்டத்திற்கு விடிவு ஏற்படத் தங்களது கருணைதான் வேண்டும். வேடிக்கையாகத் தோன்றலாம். வெளியிட்டுக் கூறிவிடுகிறேன். அன்று அக்னி சாட்சியாக வரித்துக் கரம்பற்றிய என் பதி, தங்கள் டைரக்டர். தாங்கள் விரித்த மாயவலையில் சிக்கிவிட்டார் என்பது சில தினங்கள் முன்னர்தான் தெரியும். கோபிக் க்ாதீர்கள் நைந்துபோன என் இடிந்த இதயத்தின் சோகக் குமுறல்கள்தான் இவை. ஆளுல் இந்த அபலை உங்களிடம் காதல் பிச்சை மட்டுமே வேண்டி நி ற் கிறேன். என் கணவரைத் தயவுபண்ணி என்னிடம் வந்துசேர உதவி புரியுங்கள். அன்று பிரிந்த அவர் பிரிவை இனியும் சகிக்க முடியாது. கண் நிறைந்த கணவனின் கனிவு முகத்தை ஒருதர்மேனும் தரிசித்துத் தாலி பாக்கியம்பெற அருள் புரியுங்கள். மண்டியிட்டு மன்ருடிக் கேட்டுக் கொள்ளு கிறேன். இதுவே என் தாழ்ந்த வேண்டுகோள். லக்ஷ்மி” அத்துமீறிச் சுழன்ற நடிகை மாயாவின் மனத்திரையில் டைரக்டருடன் பழக்கம் ஏற்பட்ட நாட்களின் முக்கிய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்ருகச் சினிமாப் படம்போல் ஒடலாயின. அதுவரை டைரக்டர் கல்யாணமாகாதவர் என்றே நம்பியிருந்தாள். அப்படித்தான் ஆரம்ப மு. த ல் அவரும் உறுதி சொல்லிவந்தார். ஆளுல் ...! . . . . . . . . " அதே தருணம் தோட்டத்தின் மரக்கிளை யொன்றி லிருந்து கூண்டினுள் சிறைபுகப் போகும் குயிலின் சோக கீதம் காற்றில் மிதந்து வந்தது. மாயா திகைத்தாள். உள்ளத்தை வெளிக்காட்டிய மதுர மோகன கீதத்தின் பண்பாட்டில்