பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


டைரக்டரின் கைபிடித்த மனைவியின் ஒடிந்த உள்ளத்தின் அவல ஒலம் எதிரொலிப்பது போன்ற பிரமை எழுந்தது அவளுக்கு. கைகோர்த்த புருஷன்-மனைவியரிடையே நிலவ வேண்டிய மனமொன்றுபட்ட பாந்தவ்யம்-அன்பின் இணைப் பில் உருவகிக்கும் பாசத்தின் பின்னல் அறுந்துபோய்விடக் காரணம் அவளே என்பதை உணர்ந்த மாயாவின் இமை வட்டங்களில் விளிம்புக் கோடிட்ட நீரை மெல்ல ரோஜா விரலால் துடைத்தாள். ஆளுல் அவள் குற்றவாளியா? ஒருக்காலுமில்லை. மன மறிந்த விதமாக அவள் யாருக்கும் குந்தகம் விளைவிக்க வில்லைதான். டைரக்டர் அவளே ஏமாற்றி வி ட் டார். எப்படியும் டைரக்டரது சபட வேஷம் வெளிப்படக் காலம் வழிவகுக்கும் என்ற திட நம்பிக்கையில் மனம் தேறிள்ை. அத்துடன் டைரக்டரது சகவாசத்தை எவ்விதத்திலும் ஒடுக்கிவிட முடிவு செய்துவிட்டாள் ! 鬱 嶽 據 ஸ்டுடியோ ஞாபகம் அப்பொழுதுதான் வந்தது. புறப் பட்டாள். அவள் உள்ளம் சாந்தி நிறைந்தது. இமைப் போதில் புயல் கிளம்பிற்று புயல் வீசியது. பின்னர் புயல் அடங்கி அமைதி ஆம். விந்தைதான் ! - ஜோதிநாத்தை மாயாவிற்கு அறிமுகம் செய்து வைத் தார் டைரக்டர். ஆனல் அந்த முதல் சந்திப்பில் இரு நடிகர்களிடையேயும் கனிந்த கனவின் மயக்கத்தை ஜாடை யாகக் கவனித்துவிட்ட டைரக்டருக்கு என்னவோ போல் இருந்தது. இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ள இயலவில்லை. ஒரு சில தினங்கள் தேய்ந்தன. மாயாவும் ஜோதிநாத்தும் நெருங்கிப்பழகினர். டைரக்டரது வஞ்சகத்திற்குப் பரிகார மாக ஜோதிநாத்திடம் ஏற்பட்ட பரிச்சயம் புனிதத்தன்மை வாய்ந்தது என எண்ணிப் பூரித்தாள் மாயா. தன் இதயத் தாமரையே மலர்விக்கச் சக்திபெற்ற பிரேமைக் கதிர்கள் ஜோதிநாத்திடமே நிலவியுள்ளன என்பதைக் நிர்ணயித்துக் கொண்டாள். 鐵線 彎。 o