பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


" நில்லுங்க எல்லோரும் !’ ஆனே மொழிந்தவர் ஆசிரியர் வேலாயுதம்தான் ! மாணவர்களும் மாணவிகளும் ஒன்றும் புரியாமல் அப் படியே விழி பிதுங்க மலேத்து நின்று விட்டார்கள் !... வாத்தியார் வேலாயுதம் மேஜை டிராயரைத் திறந்து ஒரு பொட்டணத்தை எடுத்து மேஜைமீது வைத்தார். என்ன பொட்டலம் அது ?-எல்லோரும் விழித்தார்கள் ! ' பாபு, இதிலே இருக்கிற மிட்டாயை எடுத்து ஆளுக் கொன்முகக் கொடப்பா !” என்ருர் ஸார். சிறுவன் பாபுவுக்கு வியப்பு மேலிட்டது. எங்களுக்.ே எதுக்குங்க ஸார் மிட்டாய் ? பேணு திருடு போன நஷ்டத் திலே உங்களுக்கு இது வேறே வீண் செலவாச்சுங்களே, லார் ?’ என்று லாப நஷ்டக் கணக்கைச் சுட்டினன்.

  • பாபு, முதலிலே நீ மிட்டாயைக் கொடு ” கண்டிப் புடன் உத்தரவிட்டார் வேலாயுதம்.-- - -

எல்லோருக்கும் தலைக்கு ஒன்று வீதம் மிட்டாய் வழங்கப் பட்டது போக, மிச்சம் ஒரு மிட்டாய் ஒரே யொரு மிட்டாய் இருந்தது. " ஸார், இந்த ஒரு மிட்டாய் உங்களுக்காகவே மிஞ்சி யிருக்குங்க, ஸ்ார். இந்த மிட்டாயை நீங்க எடுத்துக்கங்க, ஸ்ார், ! ' என்று மரியாதையின் பாசம் துலங்க வேண்டினன் பாபு. கனி இதழ்களிலே கனிவு இருந்தது. வாத்தியாரின் கண்ணிர் வெள்ளத்தை அப்பொழுதுதான் வகுப்புப் பிள்ளைகள் அனைவரும் வெளிப்படையாகக் கவனித் தார்கள் போலும் மாணவ மாணவிய ரிடையே பரபரப்பு பதட்டநிலை எழுந்தது. வாத்தியார் ஸ்ார் ஏன் அழவேண்டும்? ஸ்ார், நீங்க ஏன் அழறீங்க? நீங்க இந்த மிட்டாயைத் தின்னதுக்கப்புறம்தான் நாங்களும் தின்போம். அப்பதான் எங்களுக்கும் கிடைக்கும். பே ைகிட்ைச்சிடும் ஸ்ார். அழாதிங்க்: