பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வின் தளிர் உண்டு முடிந்தது ; தாம்பூலம் தரித்துக் கொண்டு, கடைசிக் குழந்தையைக் கையுடன் அழைத்துக் கொண்ட செட்டியார்-உரிமையாளர், புறப்பட்டார். தயாராகக் காத்து நின்றது கார், கைகூப்பியவாறு அவர்களுக்கெல்லாம். நன்றி சொன்னர் செட்டியார். அவர்களுக்குக் கங்கு கரை யற்ற சந்தோஷம். - - கார் புறப்பட்டது. அவர்கள் என்கிறேனே-அந்த அவர்கள், அந்தச் செட்டி யாரின் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். மாதவன், சிதம்பரம், ராமனதன், தியாகராஜன்-இது அவர்களது பெயர் ஜாபிதா. பொறுப்பு வாய்ந்த உத்தியோகங்கள் : பொறுப்புடன் நிர்வகித்தார்கள். நாளெல்லாம் ஹோட்டலில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாதே என்ற அனுதாப மேலிட் டால் ஒரு யோசனை சொன்னர் செட்டியார், மெஸ் ஒன்று ஏற்படுத்த வேண்டுமென்று. உரிமையாளரின் பூரண ஒத் துழைப்பில்-அதாவது பண உதவியினல் அடுத்த வாரமே மெஸ் ஒன்று ஜாம் ஜாம் என்று ஆரம்பமாயிற்று.