பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


அடுத்த சில நாளில் ஆபீஸில் வேலை பார்த்த அந்த நால்வர் களும் செட்டியாருக்கு படே விருந்தொன்று வைத்தார் கள். செட்டியாரின் பெருந் தன்மைக்கு நன்றி சொல்ல வேண்டுமல்லவா முறை என்று வேறு உண்டல்லவா ! செட்டியார் விருந்து முடிந்து காரில் புறப்பட்ட தருணம் அந்நால்வர்களுக்கும் புன்னகை மெட்டிசைக்கக் கூறிய நன்றி. மொழிகள் அவர்களுக்கு அமிர்த தாரையாகச் சிந்தினதில் வியப்பேது ? உங்களுக்கெல்லாம், ஊஹாம், நமக்கெல்லாம் அடுத்த மாதம் ஒண்ணும் நம்பர் டின்னர் ஒன்று கைமேல் காத்திருக் கிறது. நம் நண்பர் தியாகு தன் பிரமச்சாரிய வாழ்வுக்கு முற்றுப் புள்ளி போடத் தீர்மானித்து விட்டார். அதாவது அவருக்குக் கல்யாணம் ; ஒன்ருக இருக்கும் அவர் இரண்டா கப் போகின்ருர்...” என்ருன் மாதவன். " நண்பருக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள் ! அவரது தாம்பத்தியம் புதுமையுடன் திகழப் பிரார்த்திக் கிறேன். ' இப்படி ஒன்று போல மற்றவர்கள் மூவரும் தங்கள் தங்கள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள். தியாகராஜன் அப்பொழுது தன் எதிர்கால மனைவி பற்றிய இன்ப நினைவில் லயித் திருந்தானே, என்னவோ ? அவனுடைய புன்னகை முகத்தில் வியர்வைத் துளிகளின் புள்ளிக் கோலத்துடன், இன்பக் கனவின் எழிற் கோலமும் கைலாகு கொடுத்துச் சேர்ந்து கொண்டன. தியாகுவின் திருமண வைபவத்துக்கு அடியேன் தம்பதி சமேதராக ஒரு வாரம் முன் கூட்டியே வந்திருந் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி வைக்கச் சித்தமாக் இருக்கிறேன். நண்பர் ராமனதனும் தன் மனைவியைக் கூட்டி வந்து விடுவார்...' என்று சொல்லிலிட்டு, நண்பர் குழாமைப் பார்த்தான் மாதவன்.