பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
53
 

பாகப் பணியாற்றுதல் வேண்டும். இவர்களில் யார் முக்கியமானவர் என்ற ஒரு பிரச்சினையும் கிளம்பும். அது தேவையில்லை. முகத்திற்கு கண் முக்கியமா, மூக்கு முக்கியமா, வாய் முக்கியமா என்றால் எல்லாம் முக்கியம்தான்.

இதையுணர்ந்து, மூவரும் மைதானத்தில் தங்களுக்குரிய இடைப்பகுதியிலே சுவர் போல நின்று, தங்கள் இலக்குப் பக்கம் பந்து வந்துவிடாதவாறு தடுத்தாட வேண்டும். எதிரிகளுக்கும் இலக்குக்கும் இடையிலே எப்பொழுதும் மைய இடைக்காப்பாளரே (Centre-Half) நிற்பதால், அவருக்கே அதிக உரிமை இருப்பது போல் தோன்றும்.

ஆனால், அவர்களில் யாரேனும் ஒருவர் பந்தை தங்கள் பகுதிக்குள் நுழையவிட்டாலும், அக்குழுவின் தோல்விக்கு ஆட்டக்காரர்கள் அனைவருமே காரணமாகின்றார்கள் என்பதையும் உணர்ந்து பார்க்க வேண்டும்.

பந்தை எதிரியிடமிருந்து தடுப்பது; எடுத்த பந்தைத் தன் குழுவினருக்கு வழங்குவது, கொடுத்த பந்தைக் கொண்டு போகும் பாங்கருடன் தானும் சென்று, எதிர்க் குழு இலக்கினைத் தாக்கும் முற்றுகைப் பணியில் கலந்து போராடுவதும், பந்துடன் தானே முன்னேறிக் கொண்டு செல்வது, எதிர்க்குழுவினரின் தடுப்புப் பணியை உடைத்தெறிய துணை நிற்பது போன்ற எல்லா திறன் நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது. அவைகளை எவ்வப்போது, எந்தெந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற முறைகளையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.