பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
95
 

ஆடுகளங்கள் அனைத்தும் ஆட்டக்காரர்களால் நிரம்பியிருக்க வேண்டும். ஆண்மையும் மேன்மையும் பெருக்கெடுத்தோட நாடும் வீடும் மகிழ வேண்டும்.

புது வெள்ளம் பாய்கிறது. விளையாட்டுத் துறை நோக்கி இளைஞர்களின் உள்ளங்கள் பாய்கின்றன. வாழ்வும் வழியும் பசுமையாகவே வளத்தோடு விளங்க வேண்டும் என்று விரும்புகின்ற அனைவருக்கும் விளையாட்டுக்களே பெரும் வாழ்வளிக்கின்றன.

கவின்மிகு கால்பந்தாட்டத்தின் பங்கும் இதில் அதிகமே! எல்லோரும் சேர்ந்திடுவோம். இனிய வழியில் கலந்தாடி மகிழ்வோம்!

கலை எழிற்மிக்கக் கால்பந்தாட்டம். காலமெல்லாம் கனிவுடன் இன்பத்தை வாரி வழங்குகின்ற அமுதசுரபி யாகவே இருக்கிறது. இருந்து வருகின்றது.

எல்லோரும் சேர்ந்தாடுவோம். தேர்ந்த வழியில் சென்று திறமைகளை வளர்த்து, தேடிய அமைதியையும் ஆனந்தத்தையும் அடைந்து, செழித்து வாழ்வோமாக!

கால்பந்தாட்டம்.pdf