பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கால ஆராய்ச்சி பரிபாடல்களைப் பாடிய புலவர் இன்றுள்ள பிற தொகை நூற்பாக்களைப் பாடிய புலவரே எனக் கொள்ளினும், அப்புலவரின் வேறானவர் எனக் கொள்ளினும், அவர்கள் காலம் சங்க காலத்தின் இறுதிக் காலமாகிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று கொள்வது தக்கதாகும். கலித்தொகையில் நற்றிணை போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள மூவேந்தர் போர்ச் செயல்களும், சிற்றரசர் போர்ச் செயல்களும் இவ்விரு தரத்தாரைப் பற்றிய பிற விவரங்களும் இடம் பெறவில்லை. பாண்டியர், அவர்தம் தலைநகராகிய கூடல், வையையாறு என்பவையே இடம் பெற்றுள்ளன. ஆதலால் கலித்தொகைப்பாக்கள் நக்கீரர், கபிலர், பரணர் போன்ற புலவர் பெருமக்களுக்குப் பின்பே பாடப் பெற்றனவாதல் வேண்டும் என்பன முன்பே கூறப்பட்டவை அல்லவா? பரிபாடலிலும் இதே நிலைமை காணப்படுவதால், இதன் காலமும் கலித்தொகையின் காலமென்றே கூறுதல் பொருத்தமாகும். குறிப்புகள் 1. செய்யுளியல், நூற்பா 116, 155. டிெ நூற்பா 117 உரை. டிெ நூற்பா 1372, 1373, 1411 உரை. தொல்காப்பியம், அகத்திணையியல், நூற்பா 53 உரை. . History of Tamil Language and Literature, S. Waiyapuri Pillai, P.29. 2 3 4 5 6. S. Vaiyapuri Pillai, History of Tamil Language and Literature, p.56. 7. காவிய காலம், எஸ். வையாபுரிப் பிள்ளை, ப. 121. 8. S. V. Pillai. History of Tamil Language and Literature, p.113. 9. இலக்கியத் தோற்றம், எஸ். வையாபுரிப் பிள்ளை, பக். 58-59. 10. இலக்கியத் தோற்றம், எஸ். வையாபுரிப் பிள்ளை, பக். 50-61. 11. LD. Swamikkannu Pillai, Indiam Ephemeries, Vol.I, Part I, pp. 98-109. 12. History. of Tamil Language and Literature, p. 56. 13. பரிபாடல் ப. 18. 14. வரி 27.2,273. 15. A description of the sky during an eclipse in poem II has been used in an attempt to fix the date of the composition of the poem by astronaical calculations, but it has proved a failure because the information in the text is not enough for calculating the date without adventitions unwarranted assumption and the informations supplied by the annotator has made confusion worse confounded. —History of the Tamils, p. 584. 16. Sir R.G. Bhandarkar, Vaishnavism, Saivism & Minor Religions, pp. 3-4. 17. புறநானூறு, செ. 55, 18. புறநானூறு, செ. 58 19. ஈ.எஸ். வரதராச அய்யர், தமிழிலக்கிய வரலாறு, ப. 236.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/101&oldid=793096" இலிருந்து மீள்விக்கப்பட்டது