பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் காலம் . 103 இவற்றால் அறியப்படுவன (1) கழற்சிங்கன் பேரரசன், (2) அவன் 'கழற்சிங்கன் என்றதால் சிறந்த போர்வீரன், (3) சிறந்த சிவபக்தன், (4) அவனுக்குத் திறை கட்டா (அடங்காத) மன்னர் (பிோரில்-சிவனருளால்) தண்டிக்கப்பட்டனர். இராச சிங்கன் (கி.பி. 85-720) இனி, இக்குறிப்புக்கள் இராச சிங்கனைப் பற்றிய குறிப்புக்களோடு ஒன்றுபடுகின்றனவா என்பதைக் காண்போம்: 1. இவன் பேரரசன் என்பது சீனத்துடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பினால் நன்கு விளங்குகிறது." 2. இவன் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன் போரில் சிங்கம் போன்றவன்; போரில் மிகக் கொடியவன்; தன் பகைவரை அழிப்பவன்; பகைவர்க்கு இடியேறு போன்றவன்; கொடிய பேரரசுகளை ஒழிப்பவன்; பல இடங்களை வென்றவன்; போரில் மனவுறுதி உடையவன்; போரில் களைப்படையாதவன்; செருக்கரை அடக்குபவன்." என்று இவன் கட்டிய கயிலாசநாதர் கோவிற் கல்வெட்டுக்கள் இவனைப் பாராட்டியுள்ளன. ஆதலின் இவன் சிறந்த போர்வீரன் என்பது தெற்றெனத் தெரிகிறது. இவன் சாளுக்கிய விநயாதித்தனையும் கங்க அரசனான முதலாம் சிவமாறனையும் தாக்கிப் போரிட்டான் என்று கருதப்படுகிறது." 3. இவன், 'ரிஷபலாஞ்சனன், பூரீ சங்கர பக்தன், சிவசூடாமணி’ என்று கல்வெட்டுக்களிற் புகழ்ப்படுபவன்; உலகப் புகழ் பெற்ற காஞ்சி கயிலாசநாதர் கோவில் கட்டியவன்; சைவசித்தாந்தத்திற் பேரறிவுடையவன்; கலியுகத்தில் வான் ஒலி (அசரீரி) கேட்ட பேறுடையவன்." இக்குறிப்புக்களால் இவன் சிறந்த சிவபக்தன் என்று துணிந்து கூறலாம். 4. இவன் காலத்தில் பல்லவர்க்கும் தமிழ் அரசர்க்கும் போர் நடந்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாகப் பாண்டிய அரசனான கோச்சடையன் இரணதீரன் இவன் மருமகனாகவும், அவன் மகனான தேர்மாறன் இராச சிம்மன் இவன் பெயரனாகவும் கருதப்படுகிறான்." கோச்சடையன் இரணதீரன், நெடுமாறன் மகனாதலின், தாய்வழியிற் சோழனுமாவான். இவன் உதவியின்றிச் சோழர் பல்லவனை எதிர்க்க வழியில்லை. எனவே, இராசசிங்கன் காலத்திற் பல்லவர்க்குத் திறைகட்டா மன்னவர் என்று சுந்தரராற் குறிக்கப்பட்ட பகைவர் வலிமையும் சிறப்பும் பெற்றவராதல் - அப்பகைவர் இன்னவர் என்பதாதல் இவன் வரலாற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/110&oldid=793121" இலிருந்து மீள்விக்கப்பட்டது