பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கால ஆராய்ச்சி 3. இவன் குமார மார்த்தாண்டன் என்ற தன் பெயர் கொண்ட விளக்கு ஒன்றைத் திருவிடைமருதூர்ச் சிவனார்க்களித்தான்' திருவொற்றியூர்ச் சிவன் கோவிலில் விளக்கு வைக்கப் பொன் தந்தான்" திருத்தவத்துறை மகாதேவர் கோவிலில் விளக்கெரிக்கப் பொன் அளித்தான்” திருக்கடைமுடி மகாதேவர்க்கு நிலதானம் செய்தான்." திருப்பதிகம் கோவில்களில் ஒதப்பெற்றது என்பதை முதன் முதல் அறிவிக்கும் திருவல்லம் ്റ്റു് இப்பெருமகன் காலத்தில் எழுந்ததே ஆகும். 6ஆம் குறிப்பு சேக்கிழார் கூற்றிலிருந்து கழற்சிங்கனது பட்டத்தரசி செய்த தவறுகள் இரண்டு என்பது புலனாகும். அவையாவன: 1. கணவன் பூங்கோயிற் பெருமானை வணங்கும் பொழுது உடன் இருந்து வணங்காமை. கோவிலுக்குச் செல்லும் கணவனும் மனைவியும் சேர்ந்தே வணங்குதல் யாண்டும் எக்காலத்தும் உள்ள முறைமை யன்றோ? இவ்வியற்கைக்கு மாறுபட்ட செயல் இவ்வரசியிடம் காணப்படல் நோக்கத் தக்கது. 2. பூமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்தில் இருந்த புதுமலர் இறைவனுக்கு மாலை கட்டற்குரியது என்பதனையோ, கோவிலில் உள்ள மலரை மோத்தல் ஆகாது என்பதனையோ அறியாமல் இவள் மலரை மோந்தமை பெருங்குற்றமாகும். இவ்விரு குற்றங்களையும் செய்தவள் இராச சிங்கன் பட்டத்தரசியாக இருத்தல் கூடுமா? நந்திவர்மன் பட்டத்தரசியாக இருத்தல் கூடுமா? என்பது இங்கு ஆராய வேண்டுவதாகும். 1. இராசசிங்கன் பட்டத்தரசி ரங்கபதாகை என்பவள். அவள் சிவனுக்கு அமைந்த பார்வதிபோல இராச சிங்கனுக்கமைந்த பத்தினி. அவள் கயிலாசநாதர் கோவிலில் உள்ள பல சிறு கோவில்களில் ஒன்றைக் கட்டியவள்" எனவே, அவள் சிறந்த சைவப் பெண்மணி என்பது நன்கு விளங்கும். 2. நந்திவர்மன் பட்டத்தரசி சங்கா என்பவள். இவள் பேரழகி; கலைகளில் வல்லவள்; குடிகட்குத் தாய் போன்றவள்; அரசனது நற்பேறே உருவெடுத்தாற் போன்றவள்; இவள் இராஷ்டிரகூட அரசமரபினள்; இவள் மகன் நிருபதுங்கன் எனப்பட்டவன். 4. ஆதலின் இவள் இரட்டப் பேரரசனான அமோக வர்ஷ நிருபதுங்கன் 1 மகள் என்பது கருதப்படுகிறது." அந்த இரட்ட அரசன் காலம் கி.பி. 814880’ அவன் சிறந்த சமண பக்தன், சமண சமய நூல் செய்தவன்.” ஸ்யாத்வாத (Syadvada) சமணத்தைப் பின்பற்றியவன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/113&oldid=793125" இலிருந்து மீள்விக்கப்பட்டது