பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் காலம் 107 திகம்பர சமணரை ஆதரித்தவன்; ஜினசேனர் என்ற சிறந்த சமண குருவின் ஆசி பெற்றவன்’ எனவே, சங்கா சிறந்த சமண பக்தன் மகள் என்பது பெறப்பட்டது; அவள் அக்கை கணவனான நீதிமார்க்கன் என்ற கங்க அரசனும் சிறந்த சமண பக்தன்." இங்ங்னம் சமண குடும்பத்தில் பிறந்தவள் ஆதலின், சங்கா, தன் கணவன் செய்தாற் போலச் சிவன் கோவில்கட்குத் தருமம் செய்திலள் போலும்! ஆயின், நந்திவர்மனது மற்றொரு மனைவியான அடிகள் கண்டன் மாறம்பாவை என்பவள் சிறந்த சைவப் பற்றுடையவள், பல கோவில்கட்கும் பொன் அளித்தவள்.” இக்கூறியவற்றால், சங்கா என்ற சமணப் பெண்மணிதான் பட்டத்தரசியாதலின், அரசனுடன் சிவத்தலங்களைக் காணச் சென்றாள்; அரசன் சிவபக்தியில் ஈடுபட்டவன்; இவள் சிவன் கோவில் அழகில் ஈடுபட்டவள்; அதனாற்றான், அரசன் ஆரூர்ப் பெருமானை வணங்கிக் கொண்டிருந்த பொழுது, இவள் கோவில் அழகினைக் கவனித்து வந்தாள் என்பது எண்ண வேண்டுவதாக உள்ளது. சிறந்த சிவபக்தனான நந்திவர்மன் சமண அரசன் மகளை மணந்தது என்னை? எனின், அஃது அரசியல் தந்திரம் என்க. இங்ங்னமே தமது நாட்டைக் கவர்ந்த பல்லவர்க்கு அஞ்சிச் சைவனான சோழன் சிறந்த சைவப் பற்றுடைய மங்கையர்க்கரசியாரைச் சமணச் சார்புடைய நெடுமாறனுக்கு மணம் செய்வித்ததும் அரசியல் தந்திரம் என்க. --- இங்ங்னம் சுந்தரர் கூற்றுக்களைக் கொண்டு ஆராயினும், சேக்கிழார் கூற்றுக்களைக் கொண்டு ஆராயினும், மிகவும் பொருத்தமாகக் கழற்சிங்கன் என்று கருதத்தக்க நிலையில் இருப்பவன் மூன்றாம் நந்திவர்மன் என்பது புலனாகும். இவனது காலமே ஏறத்தாழச் சுந்தரர் காலமாகலாம் என்பதற்குப் பின்வரும் செய்திகளும் துணை புரியக் காணலாம். பிற சான்றுகள் இராச சிம்மனைப் பற்றிய சீனக் குறிப்புக்களைக் கொண்டு அவன் ஆட்சி இறுதிக் காலம் கி.பி. 720 எனக் கொள்ளப்படுகிறது. மகாவம்சம் கொடுத்துள்ள காலக் கணக்குகள் தென் இந்தியக் கல்வெட்டுக் கணக்குகளை விட ஏற்ததாழ 25 ஆண்டுகள் மிகுதிப்படுகின்றன." அதுபோலச் சீனர் குறித்துள்ள தேதிகட்கும் பல்லவ அரசர் தேதிகட்கும் உள்ள வேறுபாடு இதுகாறும் கண்டறியப்படவில்லை. ஆதலின், நந்திவர்மன் காலம் திட்டமாகக் கி.பி. 840-865 என்று கூறமுடியாது என்பது நினைவில் இருத்துதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/114&oldid=793126" இலிருந்து மீள்விக்கப்பட்டது