பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ösTQ} ஆராய்ச்சி கி. பி. 12, 13ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சந்தான ஆச்சாரியர்கள் கண்டித்து உள்ளனர். மாணிக்கவாசகர் போற்றித் திருஅகவலில், மிண்டிய மாயா வாதம் என்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித் தார்த்து என்று கூறியுள்ளனர். எனவே, இவர் கி.பி. 9ஆம் நூற்றாண்டினர் என்பதை இது வற்புத்தும்." (5) மூவர் பாடல்களில் ஆகமங்களைக் குறிக்கும் இடங்கள் மிகச் சிலவே. ஆயின், மாணிக்கவாசகர் பல இடங்களில் ஆகமங்களைக் குறிப்பிட்டுள்ளார்: 'ஆகம மாகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க’ “மன்னு மாமலை மகேந்திர மதனிற்” "சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்" "மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்" என்று இங்ங்னம் சொல்லியிருத்தல், மணிவாசகர் காலத்தில் ஆகமம் சிறப்படையத் தொடங்கியதைக் காட்டும். தேவார காலத்தில் சிவபக்தர்கள் அடியார்கள் என்றும், தொண்டர்கள் என்றும் சொல்லப்பட்டனர். விஷ்ணு பக்தர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர். சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும் பிற்காலத்தில் ஆசாரியர் தோன்றினர். சைவத் திருமுறைகள் வகுக்கப்பட்ட பின்பு முன்பிருந்த சிவனடியாருட் சிலர் சமயாசாரியார் ஆக்கப்பட்டனர். மெய்கண்ட தேவர் முதலிய சந்தான ஆசாரியர் 12, 13, 14ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராவர். ஆகமம் பரவிய பிறகு தீட்சை தேவைப்பட்டது. தீட்சை செய்விக்க ஆசாரியன் தேவைப்பட்டான். பின்தோன்றிய சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஆசாரியன் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டது. தேவார ஆசிரியர் தீட்சை பெற்றவர் அல்லர். மணிவாசகர் தீட்சை பெற்றார்; ஆசாரியரையும் பெற்றார். எனினும், ஆசாரியப் பின்வந்த சாத்திரப்படி ஞானத்தை ஆசாரியர் உபதேசிக்கவில்லை; பத்தி மார்க்கத்தையே உபதேசித்தார். பத்தியால் மலம் கெடும்; ஞானம் வரும்; சிவமாகலாம். "பக்தி நெறி அறிவித்து" "சிவமாக்கி எனையாண்ட" என்னும் திருவாசகத் தொடர்களால் இதனையறியலாம். எனவே, 'ஆகம நெறி சிறிது பரவியும், முற்றும் பரவாமலும் இருந்த காலம் மணிவாசகர் காலம் என்னலாம்".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/127&oldid=793155" இலிருந்து மீள்விக்கப்பட்டது